ஸுஃபி
மாஸ்டர் சாதி ஆஃப் ஷிரேஸ்
இன் முத்து ஒன்று:
என்
நண்பன் ஒருவன் தன் மனைவி
கர்ப்பமாக இருந்தது குறித்து
மகிழ்ந்தான். தனக்கு
ஒரு ஆண் பிள்ளை பெற வேண்டும்
என்று ஆசை. இது
குறித்து இறைவனிடம் மிகவும்
வருத்திக்கொண்டு வேண்டினான்.
அவன்
மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
மிகவும்
சந்தோஷம் அடைந்த நண்பன்
கிராமம் முழுவதுக்குமே
விருந்து வைத்தான்.
பல
காலம் சென்றது. நான்
மெக்காவில் இருந்து திரும்பினேன்.
நண்பனின்
கிராமம் வழியாக பயணித்தேன்.
அங்கே நண்பன்
குறித்து விசாரித்தேன். அவன்
சிறையில் இருப்பதாக சொன்னார்கள்.ஏனென்று
கேட்டேன். அவனது
மகன் கோபத்தில் ஒருவனுடன்
சண்டையிட்டு கொன்று விட்டதாகவும்
ஊரை விட்டு ஓடிப்போய்விட்டதால்
அவனுக்குப்பதில் அவனது தந்தையை
சிறையிட்டு வைத்திருப்பதாகவும்
சொன்னார்கள்.
கடவுளிடம்
எதையும் மிகவும் வேண்டிப்பெறலாம்தான்.
அது
பாராட்டுக்குறியது.
சில சமயம்
ஆபத்தானதும் கூட!
No comments:
Post a Comment