நாரதர்
மஹாவிஷ்ணுவை பார்க்க ஸ்தல
யாத்திரையாகப்போய் கொண்டு
இருந்தார். ஒரு
நாள் இரவு நேரம். தங்க
கிராமத்தில் ஒருவர் இடமளித்து
உணவளித்து உபசாரம் செய்தார்.
பின் எங்கே
போய்க்கொண்டு இருக்கிறீர்கள்?
என்று
விசாரித்தார். நாரதர்
தான் மஹாவிஷ்ணுவை பார்க்க
போவதாக சொன்னார்.
“அப்படியா?
எங்களுக்கு
குழந்தைகள் இல்ல. அவர்கிட்ட
அனுகிரஹம் பண்ணச்சொல்லி
சொல்லுங்க.”
நாரதரும்
சம்மதித்தார். பல
இடங்களுக்கும் போய் கடைசியில்
விஷ்ணுவை தரிசிக்கையில்
ஞாபகமாக இது பற்றியும் சொன்னார்.
விஷ்ணுவோ
"நான்
என்ன செய்ய? அவரது
கர்மா படி அதுக்கு வாய்ப்பு
இல்லை. சட்ட
திட்டத்தை எல்லாம் நானே மீற
முடியாது" என்றார்.
இதை
சொல்ல மனதில்லாமல் நாரதர்
வேறு வழியாக திரும்பி விட்டார்.
ஐந்து வருடங்கள்
கழித்து மீண்டும் அதே வழியில்
போக நேர்ந்தது. இந்த
முறை அந்த குடிசையில் இரண்டு
குழந்தைகள் விளையாடிக்கொண்டு
இருப்பதை பார்த்து"
யார் இவர்கள்?”
என்று கேட்டார்.
"என்
குழந்தைகள்தான்"
என்றார்
கிராமவாசி. “நீங்க
போன தரம் வந்து போன பிறகு சில
நாட்களில ஒரு சன்னியாசி
வந்தார். அவர்கிட்டயும்
சொன்னேன். ஆசீர்வாதம்
பண்ணார். அதுக்கப்பறம்
ஒரு வருஷம் கழிச்சு குழந்தை
பிறந்தது" என்றார்.
விஷ்ணுவை
தரிசிக்க கோவிலுக்கு போன
நாரதர் நடையிலிருந்தே கத்தினார்.
“ நீ அந்த
கிராமவாசிக்கு குழந்தைக்கு
வாய்பே கிடையாதுன்னு சொல்லலை?
இப்ப அவருக்கு
ரெண்டு குழந்தைங்க இருக்கு!”
விஷ்ணு
சிரித்துக்கொண்டே சொன்னார்.
“ நான் என்ன
செய்ய? அது
அந்த உத்தம சன்னியாசியோட
ஆசீர்வாதம் பண்ண வேலை.
ஆமா விதிய
அவங்களால மாத்த முடியும்!"
ஏசுவின்
விதி அனுமதிக்கும் முன் அவரது
அம்மா அவரை திருமண விருந்தில்
ஒரு அற்புதம் நிகழ்த்த வைத்தது
போல!
No comments:
Post a Comment