நான்
பல வருடங்களாக மனநிலை
பாதிக்கப்பட்டு இருந்தேன்.
பரபரப்பு,
உளச்சோர்வு,
தன்னலம்.......
பலரும் என்னை
மாறும்படி அறிவுறுத்தினர்.
அவர்களை
எனக்குப்பிடிக்கவில்லை.
ஆனாலும் மாற
நினைத்தேன். முடியவே
இல்லையே, என்ன
செய்வது?
எது
என்னை மிகவும் துன்புறுத்தியது?
என் நெருங்கிய
நண்பன் என்னை மாறச்சொல்லிக்கொண்டு
இருந்தான். நான்
சக்தியிழந்தவனாகவும் பொறியில்
மாட்டிக்கொண்டவன் போலவும்
உணர்ந்தேன்.
ஒரு
நாள் அந்த நண்பன் என்னிடம்
சொன்னான். சரி
நீ மாற வேண்டாம். நீ
இருப்பது போலவே இருந்தாலும்
உன்னை நேசிக்கிறேன்.
என்
இறுக்கம் தளர்ந்தது;
நான் உயிர்த்தேன்.
எதிர்பாராமல்
நான் மாறிவிட்டேன்!
இப்போது
எனக்குப்புரிகிறது.
மாறுகிறேனோ
இல்லையோ, அதை
பொருட்படுத்தாமல் என்னை
ஒருவர் நேசிக்கிறார் என்று
தெரியும் வரை என்னால்
மாறமுடியவில்லை.
இப்படித்தான்
என்னை நேசிக்கிறாயா கடவுளே?
No comments:
Post a Comment