ஒரு
இறை தூதர் நகரவாசிகளை மாற்ற
வந்தார். முதலில்
அவரது பிரசங்கத்தை கேட்க
பலர் கூடினர். மெதுவாக
அவர்கள் கலைந்தனர். சில
நாட்களில் யாரும் நின்று
கேட்கக்கூட இல்லை.
இருந்தாலும்
அவர் பிரசங்கம் செய்து கொண்டே
இருந்தார்.
ஒரு
நாள் ஒரு வழிப்போக்கர் இதை
பார்த்துவிட்டு கேட்டார்.
'எதுக்கு
யாருமில்லாட்டாக்கூட பிரசங்கம்
செய்யறிங்க?'
இறைதூதர்
சொன்னார்: 'முதல்ல
மக்கள மாத்த முடியும்ன்னு
நினைச்சு பிரசங்கம் செஞ்சேன்.
இப்ப அவங்க
என்ன மாத்திடாம இருக்கணும்ன்னு
பிரசங்கம் செய்யறேன்.'
No comments:
Post a Comment