முல்லா
நசருதீன் முட்டைகளை விற்று
பிழைப்பு நடத்திக்கொண்டு
இருந்தார். ஒரு
நாள் ஒருவர் கடைக்கு வந்தார்.
'என் கையில
என்ன இருக்குன்னு சொல்லு
பாப்பம்?'
'ம்ம்ம்ம்
ஒரு குளூ கொடுங்க.'
'சரி.
ஒரு முட்டை
வடிவத்துல இருக்கு.
முட்டை சைஸ்ல
இருக்கு. பாக்க
முட்டை மாதிரியே, சாப்பிட
முட்டை மாதிரியே வாசனை முட்டை
மாதிரியே இருக்கு. உள்ள
மஞ்சளும் வெள்ளையுமா இருக்கு.
சமைக்கறதுக்கு
முன்ன தண்ணியா இருக்கும்.
சமைச்சா
இறுகிடும். ம்ம்ம்ம்ம்
ஒரு கோழிதான் இத போட்டது...'
'அஹா!
எனக்குத்தெரியுமே!
அது ஒரு
மாதிரி கேக்!'
ரொம்ப
நிபுணத்துவம் இருக்கறவங்க
தெளிவா இருக்கறதை பாக்கிறதில்லை!
தலைமை பூசாரி
இறைதூதரை பார்க்கிறதில்லை.
No comments:
Post a Comment