நான்
காது கேளாதவனாக இருந்தேன்.
சிலர்
மேடையில் ஏறி உடலை இப்படியும்
அப்படியும் நெளிப்பதை பார்த்து
ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.
இவர்கள் ஏன்
இப்படி அவஸ்தைப்படுகிறார்கள்
என்று. அவர்கள்
அதை நடனம் என்று சொன்னார்கள்.
ஒரு
நாள் திடீரென்று எனக்கு காது
கேட்க ஆரம்பித்துவிட்டது.
இசையை கேட்டேன்.
நடனம் அவஸ்தை
இல்லை என்று புரிந்தது.
ஏன்
ஞானிகளும் காதலர்களும் ஒரு
மாதிரி கிறுக்குத்தனமாக
நடந்து கொள்ளுகிறார்கள்
என்று எனக்கு புரிவதில்லை.
இதயத்தில் இசை
கேட்கும் அந்த நாளுக்காக
காத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment