Pages

Wednesday, July 8, 2009

ஆன்மீக அன்பு என்கிறது.....



கவிநயா! ரொம்ப யோசிக்க வெச்சுட்டீங்க!
http://kavinaya.blogspot.com/2009/07/blog-post.html
உங்களை மாதிரியே உரத்த சிந்தனைதான் இதுவும்.

அன்பு என்கிறது unqualified love என்கிறது சரிதான். ஆனா இதோட முழு பரிணமமும் நாம புரிஞ்சுக்கிறோமா என்கிறது கேள்விக்குறியே.
இதிலே "திருப்பி எதுவும் எதிர்பாராமல்" என்கிறதிலேயே நாம் கவனம் செலுத்தறோமோ? அப்படி பாக்கிறதிலே இதன் முழு வீச்சு காணாமல் போயிடுது.
இதை முன் பின்னா பாக்கலாம். அப்ப சரியா புரியுதான்னு. அன்பிலேந்து ஆன்மீகம் போகாம, ஆன்மீகத்திலேந்து அன்புக்கு வரலாம்.
ஆன்மீக பார்வையிலே அன்பு என்ன?
நல்ல பக்தன் யார் மேலே அன்பு வெச்சு இருக்கான்? பகவான் மேலே என்கிறது சரிதான். ஆனா அவன் பகவானை எங்கே பார்க்கிறான்? எல்லாத்திலேயும் பார்க்கிறான். நாயிலும் நாயை தின்னும் புலையனிலும் கூட பார்க்கிறான். ஞானியிலும் பார்க்கிறான். இப்படி அவன் பார்வையிலே எல்லாமே பகவத் சொரூபமா இருக்கிறதாலே எல்லாத்துகிட்டேயும் அவனுக்கு அன்பு பொங்கி வருது! இப்படி இல்லாதவன் இன்னும் பக்தி என்கிற பாதையிலே முன்னேறனும். அவன் பாதையிலேதான் இருக்கான்.

மனித நேயம்ன்னு புதுசா வார்த்தை கண்டுபிடிச்சதா நினைக்கிறவங்க நாம அதையும் தாண்டிட்டோம் பிரபஞ்ச நேயத்துக்கு போயாச்சு ன்னு புரிஞ்சுக்கணும்.

ஞானி யார் மேலே அன்பு வைக்கிறான்? அவன் தன் மேலேயே அன்பு வைக்கிறான். அதே சமயம் ஞானிக்கு தானே எல்லாம்ன்னு புரிஞ்சு இருக்கு. அதனால அவன் எல்லாத்து மேலேயும் அன்பு வைக்கிறான்.

மேலே சொன்ன ரெண்டு அன்பிலேயும் அளவு மாறாது. எல்லாத்துகிட்டேயும் சமமாகவே இருக்கும். சில நேரத்திலே அதிகம் - சில நேரம் குறைவுன்னு கிடையாது.

நிகழ் காலத்திலே ஒத்தர்கிட்டே அன்பு பாராட்டறது கொஞ்சம் சுலபம்தான். ஆனால் எப்போ கடந்த காலமும் எதிர் காலமும் வருதோ அப்ப அன்பு பாராட்டறது கொஞ்சம் சிரமம்தான். இவன் எனக்கு 5 வருஷம் முன்னே என்ன தீங்கு பண்ணான் ன்னு நினைப்பு வந்தா எங்கே அன்பு வைக்கிறது? எதிர் காலத்திலே இவன் நம்மை கவனிச்சுக்குவானோ இல்லையோன்னு நினைச்சா எங்கே அன்பு வைக்கிறது?
தேர்ந்த பக்தன்கிட்டேயும் ஞானிகிட்டேயும் இதிலே பிரச்சினை இல்லை. அவங்க எப்பவுமே நிகழ்காலத்திலேதான் இருக்காங்க!

அப்ப எல்லாத்துக்கிட்டேயும் எப்பவும் அன்பு காட்டுவதே ஆன்மீகத்திலே அன்பு. எப்ப இது ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளே வருமோ அப்ப இது ஆன்மீக அன்பில்லை. உடனடியா இந்த ஸ்டேஜுக்கு போக முடியாதுதான். நம் அன்பு காட்டுகிற வட்டம் கொஞ்சம் கொஞ்சமா விரிஞ்சுகிட்டே போகணும். நாம் நம் குடும்பம், நம்ம ஊர், நம்ம தேசம், இப்படி விரிஞ்சு அப்புறம் மனித இனம் மட்டுமில்லாம, மத்த செடி கொடிகள் - இங்கே கூட போயிடலாம்- எல்லா ஜீவ ராசிகள் ன்னு விரியனும். வீட்டு செல்ல பிராணிகளான பூனை ஆனை மேலே அன்புன்னு மட்டும் இல்லே! மத்தபடி கொசு? பூரான்? தேள், பாம்பு? இதை எல்லாம் பிடிச்சு கொஞ்ச வேணாம்; கொல்லாம இருக்கோமா? கொசு மருந்து அடிச்சு அவற்றை கொல்லாம இருக்கோமா? எறும்பு மருந்து அடிச்சு அதை எல்லாம் அழிக்காம இருக்கோமா? சிலந்தி வலை கட்டினா திருப்பி வராம இருக்கணும்ன்னு வாக்குவம் க்ளீன் பண்ணாம இருக்கோமா? ஏன் அதுக்கெல்லாம் இந்த உலகத்திலே வாழ ரைட் இல்லையா? இப்படி எல்லாம் யோசனை பண்ணா நாம் அன்பு காட்டுவதிலே எவ்வளவு முன்னேறி இருக்கோம்ன்னு புரிஞ்சு போயிடும்!


7 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

சரிதான். :)

Kavinaya said...

//ஆனா இதோட முழு பரிணமமும் நாம புரிஞ்சுக்கிறோமா என்கிறது கேள்விக்குறியே.//

இந்த கேள்வி வந்ததாலாதான் பதிவும் வந்தது :)

//எப்ப இது ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளே வருமோ அப்ப இது ஆன்மீக அன்பில்லை.//

உண்மைதான். அந்த அளவுக்குப் போக முயற்சியாவது செய்யலாம்கிற எண்ணம்தான்.

வல்லி அம்மா சொன்னதைத்தான் நானும் சொன்னேன் வேறு வார்த்தைகளில் - மனித இயல்பே சுயநலமும், சொந்தம் கொண்டாடுதலும் தான், அதனால இது இயல்பை மீறும் விஷயம்தான், என்றாலும் பழகிக்கிறது நல்லது, அப்படின்னு.

பதிவான பின்னூட்டத்திற்கு நன்றி :)

yrskbalu said...

gi,

papa ramdoss always conveying- the sadaka to be in universal love.

2. when you able to see all are in one or you - your sadana will end.this is also told by papa ramdoss

Geetha Sambasivam said...

யோசிக்க வைக்கும் அன்பான பதிவுக்கு அன்பான பாராட்டுகளும், வாழ்த்துகளும், பொதுவா லெளகீகமா வாழ்க்கையிலே எதையும் எதிர்பார்க்காட்டாலும், ஒருத்தர் மேலே அன்பு வச்சால் அது திரும்ப வரணும்னு எதிர்பார்க்கிறதை மட்டும் விட முடியலை. என்றாலும் அதையும் விடணும்னு வேண்டிக்கிறேன், கொடுக்க மட்டுமே கொடுக்கணும். எதிர்பார்க்கறதைக் குறைக்கணும். ஆனால் இந்த ஜென்மத்திலே முடியுமா?? தெரியலை! :((

திவாண்ணா said...

அட நம்ம மௌலி!
வாங்க வாங்க! :-))

@கவிநயா
ஆமாம் இந்த மாதிரி சிந்தனையை தூண்டுகிற பதிவுகளை அடிக்கடி போடணும்ன்னு கேட்டுக்கிறேன்!

வட்டம் விரியட்டும்!

வல்லியக்காவும் நீங்களும் ஒரே மாதிரிதான் யோசிச்சு இருக்கீங்க!

@பாலு, உண்மைதான். அங்கே சாதனை முடிஞ்சுடும்.

@ கீதா அக்கா
ஆரம்பிச்சாச்சு இல்லை? அப்புறம் என்ன லாஜிகல் முடிவுக்கு போயிடும்!
//ஆனால் இந்த ஜென்மத்திலே முடியுமா?? //
வொய் நாட்?

பாருங்க நானும் பதிவுக்கு மேலே பதிவு போட்டாலும் ஒண்ணும் பின்னூட்டம் அதிகம் காண்கிறதில்லை. அன்பா ஒரு பதிவு போட்டா.....

ஹிஹிஹிஹீ!

கிருஷ்ண மூர்த்தி S said...

ஸ்ரீ அரவிந்த அன்னை தெளிவாகவே சொல்கிறார்:

"At first, one loves, when one is loved.

Next, one loves spontaneously, but one wants to be loved in return!

Then, one loves even if one is not loved, but one still wants one's love to be accepted!

And finally, one loves purely and simply, without any other need or enjoy than that of loving!

--The Mother
அன்பு கூட, ஒரு பரிணாம வளர்ச்சியில் தான் படிப்படியாக உயர்ந்து, மனிதனுக்குக் கிடைக்கிறது போல!

நிச்சயமாகப் பின்னூட்டத்தை வேண்டி இதைப் போடவில்லை:--))))

மெளலி (மதுரையம்பதி) said...

//அட நம்ம மௌலி!
வாங்க வாங்க! :-))//

புரியுதுண்ணா, நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு. :)

கருத்துன்னு ஏதாவது உளறிவருவதைக் குறைத்துக் கொள்ள முயல்வதாலேயே பின்னூட்டங்கள் போடுவதில்லை. அதிலும் நீங்க எழுதறதில் ஏதேனும் சொல்லுமளவு எனக்கு ஒன்றும் தெரியாது...அதான் படிச்சுட்டு அப்படியே ஜுட் ஆகிடறேன். :)