79.
காரணத்தால் கெடாத அஞ்ஞானம் காரியத்தால் எப்படி கெடும்?
துருத்தி மாயையைச் சுழுத்தியிற் சுடாததற் சொரூப ஞானந்தானே
விருத்தி ஞானமாய்ச் சுட்டதெப் படியெனில் வெய்யிலா லுலகெங்கும்
பரித்த சூரியன் சூரிய காந்தத்திற் பற்றியக் கினியாகி
எரித்த வாறுபோற் சமாதியில் விருத்தியா லெரிக்குமென் றறிவாயே
துருத்தி (போல பல விகாசங்களை உடைய) மாயையை சுழுத்தியில் சுடாத தற் சொரூப ஞானந்தானே, விருத்தி ஞானமாய் சுட்டது எப்படி? எனில் வெய்யிலால் உலகெங்கும் பரித்த (காத்த) சூரியன் சூரிய காந்தத்தில் பற்றி அக்கினியாகி எரித்த வாறு போல் சமாதியில் விருத்தியால் எரிக்கும் என்று அறிவாயே.
அஹா! அப்ப அந்தக்கரண விருத்தியோட சம்பந்தப்படணும். எந்த கரணத்தால எதை பண்ணாலும் அது கர்மமாதானே ஆகும்? அந்தக்கரணத்தால பண்ணாலும் அது கர்மாதானே? பின்ன ஏன் அதுக்கு புதுசா ஞானம் ன்னு ஒரு பெரிய பேர்?
80.
கருமத்துக்கும் ஞானத்துக்கும் பேதம் தெரிய வினா.
அருளு மையனே திரிவித கரணத்தா லாகிய தொழிலெல்லாம்
கரும மல்லவோ விருத்திஞா னமுமந்தக் கரணகா ரியமன்றோ
உரிய கர்மமஞ் ஞானத்தைக் கெடுக்குமென் றோதினா லாகாதோ
பெரிய ஞானமென் றதற்கொரு பெயரிட்ட பெருமையை யுரையீரே
அருளும் ஐயனே திரிவித கரணத்தால் ஆகிய தொழிலெல்லாம் கருமம் அல்லவோ? (நான் பிரமம் என்ற) விருத்தி ஞானமும் அந்தக் கரண காரியமன்றோ? உரிய கர்மம் அஞ்ஞானத்தைக் கெடுக்குமென்று ஓதினால் (கூறினால்) [சம்மதம்] ஆகாதோ? பெரிய ஞானமென்று அதற்கொரு பெயரிட்ட பெருமையை உரையீரே.
--
மனம், சொல், உடல் ஆகியவற்றால் செய்வது அனைத்தும் கர்மம்தானே? நான் பிரம்மம் என்று நினைப்பதுவும் உள்ளத்தின் ஒரு கர்மம் அல்லவா? அப்படியானால் கர்மம் அஞ்ஞானத்தை போக்கும் என்று சொல்லலாம் அல்லவா? அதற்கு மகத்தான விருத்தி ஞானம் என்று பெரிய பெயர் ஒன்று வைப்பானேன்?
4 comments:
நல்ல கேள்வி...பதிலுக்கு வெயிட்டிங்...
குழப்பம் க்ளிக்!!!! :(
எந்தக்கரணத்திலே குழப்பம்? 79? 80?அனேகமா 80 ஆ இருக்கும். இது 81 லே விளக்கப்பட்டுடும்.
சுருக்கமா சொல்ல:
நமக்கு பொதுவான பொருட்களைப்பத்தி ஞானம் இருக்கு. ஒரு பேனா பென்சில் மரம் ன்னா அதைப்பத்தி நிறைய தெரியுது.
தூங்கி எழுந்தா நான் நல்லா தூங்கினேன் ன்னு ஒரு நினைப்பு; இதிலே நான் என்கிற நினைப்பு மட்டும் இருக்கு. இந்த ஞானம் நான் யார் என்கிற விசாரத்திலே போகணும். இது விருத்தி ஞானம்
:-))
vriti ghnam - just like tablet.
tablet cure the disease and it will destroy itself.
same way vriti ghana will vanised
infront of swaroopa ghana.
there is no other or second in pure
bramahaanada state.
Post a Comment