Pages

Sunday, July 26, 2009

கள்ளும் ஊனும் நீ விரும்பினால்......



கள்ளும் ஊனும் நீ விரும்பினால்....
இந்த செய்யுள் பலருக்கு பல சந்தேகங்களை தோற்றுவித்து உள்ளது என்று தெரிகிறது.
இதை கொஞ்சம் சரியான பார்வையில் பார்க்க வேண்டும்.
யக்ஞங்கள் என்றாலே அந்தணர்கள் மட்டுமே செய்வதாக ஒரு கற்பனை வந்துவிட்டது. அப்படி இல்லை. வேதத்துக்கு அதிகாரம் உடையவர்கள் அந்தணர் க்ஷத்திரியர் வைச்யர் மூன்று வர்ணத்தவரும்தான். பல புராணங்களிலே பார்த்து இருக்கிறோமே.... இந்த ராஜா ராஜ சூய யாகம் செய்தான் அந்த ராஜா அச்வமேதம் செய்தான் என்று ... யக்ஞங்களை நடத்தி வைத்தது அந்தணர்களாக இருந்தாலும் யஜமானன் மூன்று வர்ணத்தவர்களாகவே இருக்கலாம்.
சமீப காலங்களாக அந்தணர்கள் வழக்கமாக இருந்த புலால் மறுப்பை விட்டுவிடுவது பலராலும் விரோதமாக பார்க்கப்பட்டாலும் இது இடைக்காலத்தில் வந்த பழக்கமே என்று தெரிகிறது. ஆதி சங்கரர் வந்த பிறகுதான் அவர் யோசித்து ஏற்கெனெவே அந்தணர்களின் பிரம்ம தேஜஸ் குறைந்து வருகிறது. இந்த நிலையில் இவன் மாம்சம் சாப்பிட்டால் இருக்கிற கொஞ்ச நஞ்சமும் போய்விடும் என்று இப்படி மாற்றி விட்டதாக கேள்வி.
இப்போதும் அரிதாக செய்கிற பசு பந்தம் போன்றவற்றில் மிகச்சிறிதளவே யாகம் செய்கிறவர்கள் உட்கொள்ளுகிறார்கள். முகர்ந்து பார்த்து விட்டுவிடுபவர்களும் உண்டு. எந்த பொருளை ஹோமம் செய்கிறோமோ அதை ஹோமம் செய்யும் குழுவில் உள்ளோர் புசிக்க வேண்டும் என்ற விதிக்கு இணங்க இப்படி செய்யப்படுகிறது.

அடுத்து கவனிக்க வேண்டியது "இங்கே ஊனும் மதுவும் உட்கொள்ள யாகம் செய்யச்சொல்லி இருக்கிறது; அதனால் அதுதான் அதன் குறிக்கோள்" என்ற கற்பனை தவறு. யாகங்களின் நோக்கம் வெவ்வேறு. இங்கே சொல்ல வந்தது "அப்படி இச்சை இருந்தால் இது போன்ற சந்தர்பங்களில் தீர்த்துக்கொள்" என்பதே தவிர அதற்காக யாகம் செய் என்பதல்ல. (வேதம் அப்படி எங்கே சொல்லி இருக்கிறது என்று தெரியவில்லை. விசாரித்துக்கொண்டு இருக்கிறேன், பதில் கிடைக்கவில்லை.) பின்னாலேயே வரும் செய்யுள்களே அதை சுட்டிக்காட்டுகின்றன. இயல்பாக இருக்கும் இச்சைகளை "செய்" என்றா வேதம் சொல்லும்? மாற்றாக கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

பலி கொடுக்கும் ஆடுகள் எஃகு கொம்புகளுடன் வரவை எதிர் பார்த்து இருக்கும் என்பது பாகவதத்தில் புரஞ்சனோபாக்கியானத்தில் இருக்கிறது. அதன் தமிழ் வடிவத்தை பதிவில் கொடுத்து இருக்கிறேன். ஒரு உற்சாகத்தில் சோம யாகங்களாக செய்து கொண்டே போன அரசனை வழிக்கு கொண்டுவர நாரதர் அவனிடம் இப்படி சொல்லுகிறார். மற்றபடி இதற்கு வேதத்தில் ஒரு சான்றும் தென்படவில்லை என்கிறார்கள்.


5 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

வேள்விகளில் உயிர்ப்பலியை எதிர்த்தே பௌத்தமும், சமணமும், சடங்குகளை மறுத்து வளர்ந்தன.பழைய காலங்களில் இப்படியும் இருந்தது என்பதை ஒப்புக் கொள்வதனால், எதுவும் குறைந்துவிடப்போவதில்லை.

Geetha Sambasivam said...

க்ளிக்கிட்டேன், புரியுதுவிலே! நன்னிங்கோ! தெ.கு. விலும் கிடைச்சது. :)))))))))

திவாண்ணா said...

@ கீ அண்ணா
சரிதான். உள்ளதை உள்ள படி ஒப்புக்கொள்வதில் பிரச்சினை இல்லை.

@ கீ அக்கா
க்ளீக்கியதுக்கு ந்ன்னிங்கோ!

R.DEVARAJAN said...

"அப்படி இச்சை இருந்தால் இது போன்ற சந்தர்பங்களில் தீர்த்துக்கொள்" என்பதே தவிர அதற்காக யாகம் செய் என்பதல்ல.//

இதைப்போலவே விவாஹமும் optional என்பார் ஸ்ரீ சந்த்ரசேகர பாரதீ ஸ்வாமிகள்; விவாஹத்துக்கான வெளிப்படையான விதிகள் கிடையா என்பது அவர்தம் உபதேசம்.

தேவ்

திவாண்ணா said...

விவாஹம் ஆப்ஷனா இருக்கலாம். செய்துக்கனும்ன்னு விதி இருக்கானா....
சாஸ்திர விதி இருக்கு. வேத படிப்பு முடிந்து பிரம்மச்சரிய ஆசிரமம் முடியும்போது ஆசிரமம் இல்லாமல் இருக்ககூடாது; ஒண்ணு வைராக்கியம் இருந்தா சன்னியாசம் வாங்கிக்க. இல்லை திருமணம் செய்து கொண்டு க்ருஹஸ்தாஸ்ரமம் மேற்கொள் ன்னு விதிச்சு இருக்கு. கலி யுகத்தில நைஷ்டிக பிரம்மச்சரியத்துக்கு சாங்ஷன் இல்லே!