Pages

Tuesday, July 28, 2009

புருஷ தந்திரம்- வஸ்து தந்திரம்.....



81.
விருத்தி ஞானமந் தக்கர ணத்தொடு விருத்தியா கிலுமைந்தா
ஒருத்தி மக்களே தங்களிற் பகைக்கின்ற துலகெங்குங் கண்டோமே
கருத்த னாகிய புருடதந் திரங்களாங் கருமங்க ளவைபோல
வருத்த ஞானமோ புருடதந் திரமன்று வஸ்துதந்திரமாமே

(நான் பிரமம் என்ற) விருத்தி ஞானம் அந்தக் கரணத்துடைய விருத்தியாகிலும், மைந்தா, ஒருத்தி மக்களே தங்களிற் பகைக்கின்றது உலகெங்கும் கண்டோமே. கருமங்கள் கருத்தனாகிய புருட தந்திரங்களாம். (புருஷனின் கட்டுப்பாட்டில் உள்ளவை) அவை போல வருத்த (பிரயத்னத்தால் சமாதியில் உண்டான பூரண) ஞானமோ புருட தந்திரமன்று. (பிரமமாகிய) வஸ்து தந்திரமாமே.
--
நான் பிரமம் என்ற விருத்தி ஞானம் அந்தக் கரணத்துடைய கர்மம்தான். ஆனாலும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் ஒத்தருக்கு ஒத்தர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் இல்லயா? அது போல கர்மமும் விருத்தி ஞானமும் அந்தக்கரணத்தின் வேலைகள் ஆனாலும் ஞானம் கர்மத்துக்கு விரோதியே. கர்மம் சீவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. விருத்தி ஞானம் பிரம்மத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நாம் ஒரு வேலையை ஆரம்பிக்கிறோம். தினசரி சீக்கிரம் எழுந்து ஜபம் செய்ய நினைக்கிறோம். நாலு நாள் போன பிறகு இது நம்மால முடியாதுன்னு தோணுது. ஒண்ணு அதை விட்டுடுவோம்; அல்லது நாலு மணி வேணாம், அஞ்சு மணிக்கு வெச்சுக்கலாம் ன்னு திட்டம் போடுவோம்.

இப்படி சீவன் ஒரு விஷயத்தை செய்யவோ. செய்யாமல் இருக்கவோ. மாற்றி செய்யவோ சுதந்திரம் இருக்கிறது. ஆனால் ஞானம் அவன் கட்டுப்பாடில் இல்லை.

 சந்திரனை பாக்கக்கூடாது ன்னு  ஒரு விரதம் இருக்கிறான்னு சும்மாவான வெச்சுக்கலாம். அது இவன் கட்டுப்பாட்டில் இருந்தா இவன் பாக்காம இருப்பான். அது இவன் கட்டுப்பாட்டில் இல்லைன்னா இவன் வெளியே போகிற போது "தற்செயலாக" ஆகாயத்தை பார்த்து சந்திரனுக்கும் இவன் கண்களுக்கும் ஒரு சம்பந்தம் உண்டாகி விட்டால் சந்திரஞானம் வந்துவிடும்! அதை இவன் தடுக்க முடியாது.

இதை வஸ்து தந்திரம் என்கிறாங்க. வஸ்து ன்னா பரம் பொருள்தான். இது பரமாத்மாவோட கட்டுப்பாட்டில இருக்கு. ஜீவன் கட்டுப்பாட்டில இல்லை. சமாதி நிலையில அந்தக்கரணத்தோட சொரூப ஞானம் சம்பந்தப்படுவது ஜீவனோட கட்டுப்பாட்டில இல்லை. ஞானமும் கர்மா மாதிரி இருந்தாலும் இது வஸ்து தந்திரம். மத்த கர்மாக்கள் ஜீவன் கட்டுப்பாட்டில இருக்கு.



3 comments:

Geetha Sambasivam said...

ஒரு மாதிரியாப் புரியுது!! ஆனாலும் ரிவிஷன் வேணும்! :(

திவாண்ணா said...

ரொம்ப சிம்பிளா சொல்ல கர்மம் நம்ம கையிலே இருக்கு. ஞானம் நம்ம கையிலே இல்லை. அதுவா வரணும். அதுக்கு நாம் நம்மை தயார் செஞ்சுக்கணும்.

Geetha Sambasivam said...

அதான் குண்ட்ஸா க்ளிக்கிட்டு வந்துட்டேன்! :P