Pages

Friday, January 8, 2010

விசார சங்க்ரஹம் 12



17.ஹ்ருதயத்தில் ஆன்மாவே ப்ரஹ்மமாகப் பிரகாசிக்கிறதென்பதெப்படி?

தீப ஜ்வாலையினுள்ளே யுள்ள காலியிடத்திலிருக்கும் பூதாகாசமானது அந்த ஜ்வாலையினுள்ளும் புறம்பும் அபேதமாய் நிறைந்து எல்லையற்று விளங்குதல் போன்று ஹ்ருதயத்தில் ஆன்ம ஜோதியினுள்ளே யுள்ள ஞானாகாசமும் அவ்வான்ம ஜோதியினுள்ளும் புறம்பும் அபேதமாய் நிறைந்து எல்லையற்று விளங்குகிறது. இதுவே ப்ரஹ்மமென்பதாம்.

--
ஹ்ருதயத்தில் ஆன்மாவே ப்ரஹ்மமாகப் பிரகாசிக்கிறது என்பது எப்படி?

தீபம் ஒண்ணு எரியுது. அதன் ஜ்வாலைக்கு உள்ளே இருக்கிற காலியிடத்தில இருக்கிறது என்ன? ஆகாசம் -ஸ்பேஸ். அது அந்த ஜ்வாலைக்கு உள்ளேயும் இருக்கு. வெளியேவும் வித்தியாசம் பாக்காம நிறைஞ்சு எல்லையற்று இருக்கு. அதப் போல ஹ்ருதயத்தில ஆன்ம ஜோதியினுள்ளே உள்ள ஞானாகாசமும் அந்த ஆன்ம ஜோதியினுள்ளும் புறம்பும் அபேதமாய் நிறைஞ்சு எல்லையில்லாம இருக்கிறது. இதுவே ப்ரஹ்மமென்பதாம்.


2 comments:

Geetha Sambasivam said...

இப்போத் தான் பிரம்மத்தைப் பத்தித் தட்டச்சி முடிச்சிட்டு இங்கே வந்தால் இங்கேயும் அதுவே, ஆனால் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு! மறுபடியும் படிச்சுட்டு வரேன்.

Geetha Sambasivam said...

//பிராணன் முதுகுத் தண்டு வழிமேலே ஏறிப் பிடரி, மூக்கு நுனி கடந்து சதா புருவ மத்தியிலோ, சஹஸ்ராரத்திலோ ஒடுங்கிவிட்டால் நிர்விகல்பசமாதி நிலையை அடையலாம். மெளன நிலை போல் மோனநிலை கிடைக்கும். மோன நிலையில் பிராணன் ஒடுங்கியபின் உயர்வு, தாழ்வற்ற நிலை ஏற்பட்டுவிடும். இதுவே எல்லாம் பிரம்மமயம். இதை எல்லாரும் அடையலாம். இதற்கே மறு பிறவி கிடையாது. //

இதான் தட்டச்சினது. இதுக்கும் நீங்க சொல்லி இருப்பதற்கும் வேறுபாடு என்ன?? விளக்கம் ப்ளீஸ்!