புத்தியால கவனிப்பதே மனசை சமநிலைப்படுத்தும் ந்னு முன்னேயே
பார்த்தோம்.
சாதாரணமான சோகத்துக்கு உடலுக்கு வேலை கொடுப்பதும், பிடித்த விஷயம் ஏதாவது பரிசு கொடுப்பதும், மனசை வேறு பக்கம் திருப்புவதும் நல்ல விளைவை தரும். குறிப்பா அதிக உணர்ச்சி தூண்டுகிற விஷயம், ஒரு முழு நீள நகைச்சுவை படம், மாஜிக்
ஷோ இது போல…. கிடப்புல போட்ட பல விஷயங்களை எடுத்து செய்யலாம். ஏதாவது ஒரு சின்ன வெற்றி பெரிய மருந்தாகும். உடற்பயிற்சி உதவி செய்யும்ன்னு சொன்னாலும், ஏற்கெனெவே வழக்கமா செய்கிறவங்களுக்கு இந்த நேரத்துல அதை செய்வது
பலனைத்தராதாம்!
பெரிய துக்கத்துல இருக்கேன்னு சொல்கிறவங்ககிட்ட அதே போல துக்கத்தை
மற்றவரும் அனுபவிப்பது குறித்து சொன்னா அது நல்லது செய்யும். மஹாபாரதத்துல குந்தி பாண்டவர்களுடன் வனவாசம் போன புதிதில்
அங்கே வந்த ரிஷிகிட்ட புலம்பறா. அவர் துக்கத்தில இருக்கிறவன் அதே போல துக்கம் அனுபவிச்சவன்
கதை கேட்கணும். உனக்கு ஹரிச்சந்திரன் கதை சொல்லறேன் கேளு ந்னு கதை சொல்கிறார்!
அடிக்கடி சோகத்துல இருக்கிறவங்க
அதிகமா சாப்பிட்டு எடை கூடுவதும்; ஆல்கஹால் சாப்பிட ஆரம்பிச்சு உடம்பை கெடுத்துக்கிறதும் தெரிஞ்சதுதானே? ஆல்கஹால் ஏற்கெனெவே சுயமா நரம்பு மண்டலத்தை டிப்ரஸ் செய்கிற
வஸ்து. அது டிப்ரஷனை
இன்னும் மோசமாக்கும்.
டிப்ரஷனுக்கு இன்னொரு நல்ல மருந்து பிறருக்கு உதவி செய்வது. ஏதேனும் ஒரு சமூக நல குழுவோட சேர்ந்து நாமும் ஏழை எளிய மக்களுக்கு
உதவ உழைக்கும்போது நம் சோகம் ஒண்ணுமே இல்லைன்னு தோணிணாலும் ஆச்சரியமில்லை. எப்படி இருந்தாலும் நம் சோகம் மறைந்து போகும்.
ஆன்மீகம் பக்கம் திரும்பினவங்களுக்கு ப்ரார்த்தனையானது எந்த
உணர்ச்சி சார்ந்த பிரச்சினையானாலும் வேலை செய்யும்!
ஆச்சரியமா சிலர் இருக்காங்களாம். என்னவானாலும்
அதில பாசிடிவ்வா பார்க்கிறவங்க. இவங்களுக்கு உணர்ச்சிகளே கிடையாதோன்னு கூட நினைச்சு சோதனை
எல்லாம் செஞ்சு இருக்காங்க. அப்படி இல்லையாம். இந்த
மாதிரியான காலேஜ் மாணவர் ஒத்தருக்கு “அவன் அவனோட
ரூம்ல தங்கி இருக்கிற சக மாணவன் வயித்துல உதைச்சான்” ந்னு
ஒரு வரி கொடுத்து மேலே சொல்லு பார்க்கலாம்ன்னு சொன்னா .. ”ஆனா அவன் ரூம் விளக்கு ஸ்விட்சைத்தான்
போடப்பாத்தான்” ந்னு முடிஞ்சாராம்! இந்த
மாதிரி நபர்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில அவ்வளவு தேர்ச்சி பெற்று இருக்காங்க!
நவீன கருவிகளால இப்ப பல நுண்ணிய உணர்ச்சிகளை அளக்க முடியும். குறிப்பா முகத்தில ஏற்படுகிற சின்ன சின்ன அசைவுகளைக்கூட அளக்க
முடியும். அதை வெச்சு இவங்களுக்கு உணர்ச்சிகளே இல்லையா என்ன ந்னு சோதிச்சுப்பாத்தா…. உடனடியாக இவங்களுக்கு வருத்தம் கோபம் போன்ற உணர்வுகளுக்கான
எதிர்வினைகள் ஏற்படுகின்றன. அவை
சோதனைகளில தெரியுது. ஆனா அது வெளிக்காட்டாம கட்டுப்படுத்தறாங்க. ட்யூன் அவுட் செய்யறாங்கன்னும் சொல்லலாமா? இது பிறவி குணமாகவும் இருக்கலாம்.அல்லது வீட்டில இருக்கிற மிகப்பெரிய பிரச்சினைகளை சமாளிக்க
உருவாக்கப்பட்ட மெகானிஸமாவும் இருக்கலாம். எப்படி
இருந்தாலும் வளர்ந்து ஆளான பின் இவங்க கூல் கேட் தான்!
இதுல நாம் கவனிக்க வேண்டியது உணர்வுகளை பெரிய அளவில கட்டுப்படுத்த
முடியும் என்கிறது.
No comments:
Post a Comment