சரி, இந்த உணர்ச்சிகளை கையாளுவது எப்படி?
இதை கற்பனை பண்ணிப்பாருங்க!
மிஸ்டர் குமார் ஒரு கம்பெனில பாஸ்! ஒரு நாள் ஆபீஸுக்கு வராரு. முகத்தை
பாத்தாலே நாய்கள் ஜாக்கிரதை போர்டு நினைவுக்கு வருது! அவர்
அவரோட உணர்வுகளைப்பத்தி ஒரு ஐடியாவும் இல்லாம இருக்காரு. அதனால
அவரோட உணர்ச்சிகள் கட்டுப்பாட்டுல இல்லை.
அவரோட செக்ரடரி வழக்கம் போல காபி கொண்டு வந்து வைக்கிறாங்க.
உங்க காபி சார்!
ஹும்!
ஏதும் பிரச்சினை சார்?
ஒண்ணுமில்ல. கல்கத்தா
கம்பனி சம்பந்தமான பைலை கொண்டு வாங்க!
செக்ரடரிக்கு ஒரே ஷாக். இந்த
மாதிரி பாஸ் தன்கிட்ட பேசினதே இல்லையே! எதோ பெரிய
தப்பு பண்ணிட்டோம் போலிருக்கே! அவங்களுக்கு அன்னைக்கு மீதி நாள் முழுக்க உருப்படியா ஒரு
காரியமும் ஓடலை! அவங்க சக பணியாளர்கள் மேலே எரிஞ்சு விழுந்து அவங்களும் அவங்க
கீழே வேலை செய்யறவங்களை திட்டுக்கொண்டு மொத்தத்துல ஆபீஸே அன்னைக்கு சரியா நடக்கலை.
முதல் கோணல் முற்றும் கோணல் என்கிறது போல காலை குமார் எழுந்தப்பவே
பிரச்சினை. தண்ணி டாங்க் முழுக்க காலி. மோட்டார்
போட்டு தண்ணி ஏத்திவிட்டு பாத்தா கீஸர் வேலை செய்யலை. பச்சைத்தண்ணில
குளிச்சு வந்து தன் பேவரைட் க்ரே ஸ்யூட் போடுக்கலாம்ன்னு பாத்தா அது இன்னும் வாஷ் போய்
வரலை. காலை டிபன்ல உப்பு திட்டமா இல்லை. காபி ஆறிப்போயிடுத்து. பையன்
பரிட்சையில பெய்ல் ந்னு மனைவி சொன்னாங்க. பெரிய சண்டையா
ஆயிடுச்சு. ஆபீஸ் கிளம்பி வரும்போது ஒரு தறுதலை பல்சர் பைக்ல வெகு வேகமா குறுக்கே வந்து வித்தை காட்டி ஏறக்குறைய
ஹார்ட் அட்டாக் வரவெச்சுட்டான்! அப்புறம் அரசியல்வாதிக்காக ட்ராபிக்கை நிறுத்தி வெச்சுட்டாங்க. ஆபீஸ் வந்து சேந்தா ரிசப்ஷன்ல யாருமில்ல. … இப்படித்தான்
சில நாட்கள் எதை எடுத்தாலும் தப்பா போயிட்டே இருக்கும்!
ஆபீஸுக்கு ஒரு வழியா வந்து சேர்ந்தப்பவும் அவர் மோசமான மூட்லதான்
இருந்தார்! என்ன பிரச்சினைன்னே தெரியாம நாள் முழுக்க கோபத்தில இருந்ததுல
இன்னும் அதிகமா தவறுகள்தான் நடந்தன!
குமார் ஒரு வேளை புத்தியால நடந்த விஷயங்களை ஆராய்ஞ்சு இருந்தா…. பல விஷயங்கள்
புரிஞ்சு இருக்கும். பையன் பரிட்சையில் ஏன் பெய்ல்? அவன்கிட்ட
பேசி என்ன பிரச்சினைன்னு கண்டு பிடிக்கணும். சகவாசம்
சரியில்லையா, ஸ்கூல்ல சொல்லித்தரது சரியில்லையா, ஸ்கூல் மாத்தணுமா, கூடுதலா
கோச்சிங் ஏற்பாடு செய்யணுமா? ரைட் இன்னைக்கு சாயங்காலம் அவனோட பேசிடலாம்.
தான் அவனை கவனிக்கலை என்கிற குற்ற உணர்ச்சியோட அதை மறைக்க
பழியை மனைவி மேல திருப்பி மனைவியோட சண்டை போட்டது தப்பு. தப்போ
தப்பு. வீட்டுக்கு திரும்பும்போது மறக்காம அவங்களுக்கு பிடிச்ச சாக்லேட்
வாங்கிகிட்டு போகணும்.
மத்ததெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள். அதெல்லாம் நம்ம கண்ட்ரோல்ல இல்லை. தினசரி ஒண்ணு ரெண்டு நடக்கறதுதான். சில சமயம் இப்படித்தான் நிறைய நடந்து உசிரை வாங்கும். சட்! விடு!
ஆபீஸூக்கு வரும் முன்னே இதை எல்லாம் புத்தியில அப்பப்ப கொண்டு வந்து சரி செஞ்சிருந்தா பிரச்சினைகள் இன்னும் அதிகமாகி
இருக்காது. பிரச்சினைகளை ஒண்ணா கோபப்பந்தா திரட்டி இன்னும் இன்னும் அதை
வளர்த்திருக்க மாட்டார்!
No comments:
Post a Comment