மலேசிய விமானத்தில்
போனவர்கள் அனைவரையும் கடவுள் ஏன் கைவிட்டார்? உயர்வு தாழ்வு நிலைகளில்
மக்களை ஏன் படைக்கிறார்? குறையுடன் மக்களை ஏன் படைக்கிறார்? கருணை
வழங்குவதில் ஏன் பேதம்?
இப்படி ஒரு மடலாடற்குழுவில் ஒருவர் பொங்கி இருந்ததாத வருந்தி ஒருவர் மடலிட்டு இருந்தார்!
காலங்காலமாக சில கேள்விகள் திருப்பித்திருப்பி எழுப்பப்படும். அதற்கு தக்க சமாதானமும் சொல்லப்படும். ஆனால் திருப்பி அந்த கேள்வி எழுப்பப்படும்! சமாதானம் திருப்தி அளிக்கவில்லை என்பதால் இல்லை. ஏதேனும் சொல்ல வேண்டும்!
இதற்கு விதண்டாவாதம் என்று பெயர்.
மேலே சொன்னதுக்கும் "Eli, Eli, lema sabachthani? க்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை!
இரண்டும் ஒன்றும் விவரம் சரிவர புரியாத அடிப்படையிலேயே எழுப்பப்படுகின்றன.
விஞ்ஞான கோட்பாடுகளை கேள்வி கேட்க வேண்டும் என்றால் விஞ்ஞானத்தை கொஞ்சமாவது புரிந்து கொண்டு அதன் அடிப்படையிலேயே கேட்கவேண்டும். ஆனால் ஆன்மீகத்தை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் இப்படி கேள்வி எழுப்பலாம்! ஹும்! அலுத்துவிட்டது!
ஹிந்து மதங்கள் ஏதாக இருந்தாலும் சில விஷயங்கள் அடிப்படையாக ஒப்புக்கொள்ளப்படுகின்றன. மறு பிறவியில் நம்பிக்கை என்பது அதில் ஒன்று. நாம் செய்த கர்மாவுக்கு பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதும் ஒன்று.
ஜீவன் பிறக்கும் போதே அது அந்த ஜன்மாவில் என்ன என்ன அனுபவிக்கும் என்பது எழுதப்பட்டு விடுகிறது. நிர்ணயித்த நேரத்தில் உடலை நீத்து அடுத்த உடலை பெறுகிறது. ஆக பிறப்பு இறப்பு என்பது சட்டையை மாற்றுவது, அவ்வளவே! இதை புரிந்து கொண்ட ஹிந்து சாவுக்கு அஞ்சுவதில்லை!
முதலில் கேட்ட கேள்விகள் அறியா வினா என்று வைத்துக்கொண்டு எழுதுகிறேன்.
நாம் ‘உயர்’ நிலையில் பிறக்கிறோமா அல்லது ‘தாழ்’ நிலையில் பிறக்கிறோமா என்பதை நாமேதான் நிர்ணயித்துக்கொள்கிறோம்!
நாம் ‘குறையுடன்’ பிறக்கிறோமா அல்லது ‘நிறையுடன்’ பிறக்கிறோமா என்பதை நாமேதான் நிர்ணயித்துக்கொள்கிறோம்!
இவற்றை நம் செய்கையால் நாமேதான் உருவாக்குகிறோம்.
எத்தனை உயிரினங்களை கொல்கிறோம்? எத்தனை கொசுக்கள்? எறும்புகள்? ஓணான், கரப்பு, பல்லி, தவளை..... இன்னும் எத்தனையோ ஜீவன்கள்? எவ்வளவு பூச்சி மருந்து பயன்படுத்துகிறோம்? ஒரு வெடி வெடிப்பில் எத்தனை கண்ணுக்கு தெரியும்/ தெரியாத ஜீவன்கள் உயிரிழக்கின்றன? இதை எல்லாம் செய்வது நாம்தானே?
இறைவன் கருணை இல்லாதவன் இல்லை. இல்லாதிருந்தால் நாம் செய்யும் அநியாயங்களுக்கு ஒரு குந்துமணி சோறு கூட கிடைக்கக்கூடாது; ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கக்கூடாது; ஒரு நூல் கூட உடை கிடைக்கக்கூடாது. அப்படி இருந்தும் ஏதோ சோறு கிடைக்கிறது; குடிக்க நீர் கிடைக்கிறது; உடுக்க உடை கிடைக்கிறது எனில் அது அவன் கருணை இல்லாமல் வேறென்ன?

No comments:
Post a Comment