உள்ளது நாற்பது
பாயிரம்
மெய்யின் இயல்புமதை மேவும்திறனும் எமக்கு
உய்யும் படிமுருகன் ஓதுகஎனப் - பொய்யுலகின்
கள்ளம்அறும் ஆற்றால் கனரமணன் கட்டுரைத்தான்
உள்ளது நாற்பது உவந்து.
உள்ளதுஒன்று அன்றுபல என்பார்கள் உட்கொள்ளுமாறு
உள்ளதுஒன்று என்றே தான்ஓதியஅவ் – வுள்ளது
நாற்பது வெண்பாக்களை ஓர்கலிவெண்பா ஆக்கி
ஏற்ப அளித்தான் ரமணன் எண்.
No comments:
Post a Comment