உலகறிவு
மொன்றா யுதித்தொடுங்கு மேனு
முலகறிவு
தன்னா லொளிரு – முலகறிவு
தோன்றிமறை
தற்கிடனாய்த் தோன்றிமறை
யாதொளிரும்
பூன்றமா
மஃதே பொருள்.
உலகுஅறிவும்
ஒன்றாய் உதித்து ஒடுங்குமேனும்
உலகுஅறிவு
தன்னால் ஒளிரும் – உலகுஅறிவு
தோன்றி
மறைதற்கு இடனாய் தோன்றிமறையாது
ஒளிரும்
பூன்றமாம்
அஃதே பொருள்.
உலகமும்
அறிவும் ஒன்றாகவே உதிக்கின்றன;
ஒன்றாகவே
அவை ஒடுங்குகின்றன.
(மனதிற்கும்
புத்திக்கும் அதிக வேறுபாடில்லை.
திடமாக
இருப்பது அறிவு;
சலனப்படுவது
மனது)
இருந்தாலும்
அறிவாலேயே உலகமானது ப்ரகாசிக்கிறது.
இந்த
உலகமும் அறிவும் தோன்றி
மறைவதற்கான இடமாக இருப்பதும்
தனக்கு தோற்றமோ மறைவோ இல்லாது
இருப்பதுமான பூர்ணமான வஸ்து
எதுவோ அதுவே மெய்ப்பொருளாகும்.
धिया
सहोदेति धियास्तमेति लोकस्ततो
धीप्रविभास्य एषः ।
धीलोकजन्मक्षयधाम
पूर्णं सद्वस्तु जन्मक्षयशून्यमेकम्
॥ ९ ॥
தி⁴யா
ஸஹோதே³தி
தி⁴யாஸ்தமேதி லோகஸ்ததோ
தீ⁴ப்ரவிபா⁴ஸ்ய ஏஷ:
|
தீ⁴லோகஜன்மக்ஷயதா⁴ம
பூர்ணம்ʼ
ஸத்³வஸ்து
ஜன்மக்ஷயஶூன்யமேகம் ||
9 ||
No comments:
Post a Comment