ராமநாத பிரம்மசாரி
திருவண்ணாமலையில் வேத பாடசாலையில் ஒரு
சிறுவன் பயின்று
வந்தான். மிக ஏழ்மையான குடும்பம்.
பாரம் குறையட்டும் என்று
பாடசாலையில் விட்டு
இருந்தார்கள்.
ஒரு முறை மலையில் ப்ராம்மண
ஸ்வாமி இருக்கிறார்
என்று கேள்விப்பட்டு பாடசாலையில்
இருந்து எல்லாரும் போய்
பார்த்தார்கள். பகவானை
கண்ட மாத்திரத்தில் “பாவம் இவரை யார் பாத்துப்பா?”
என்ற தாயன்பு நிறைந்தது.
நேரம் கிடைக்கும் போதெல்லாம்
பகவானை போய்
பார்த்து வரலானான். சிறு
சிறு வேலைகள்
செய்வான், பகவான் கொடுப்பதை உட்கொள்வான்.
பாடசாலையில் கண்டித்தார்கள். அங்கே “போனா இங்கே வராதே!”
என்றார்கள்.
சிறுவன் சரி என்று பாடசாலையை விட்டு
விலகி பகவானிடமே
வந்து விட்டான்.
சிறுவன் திருவண்ணாமலையில் பிக்ஷை எடுப்பான். மலையேறி வந்து பகவானுக்கு
கொடுப்பான். அவர்
சிறிது உண்டுவிட்டு
“நீ
சாப்பிடு!” என்பார்.
பிறகு அவன் உண்பான்.
ஒரு நாள் வழியில் அவன் அப்பா இருந்தார். “அது என்னடா துக்கில? சாப்பாடா? எனக்கு கொடு; பசிக்கிறது!” என்றார். “பகவானுக்கு கொடுத்த பிறகே கொடுப்பேன்.
அங்கே வா” என்றான் இவன்.
”அவ்வளவு தூரம் மலையேற முடியாது.
இங்கேயே கொடு” என்றார் அவர். இவன் மறுத்தான்.
குகைக்கு வந்த சிறுவனிடம் பகவான் “அப்பாவுக்கு
கொடுத்துவிட்டு வா!”
என்றார். “அவரை இங்கே கூப்பிட்டேன்; வர மாட்டேன் என்கிறார்” என்றான். மீண்டும் ”எடுத்துக்கோங்க” என்று கெஞ்சினான். பகவானுக்கு கொடுத்த பின்
சாப்பிடறதுதான் சம்மதமாயிருக்கு
என்றான்.
”அதுவும் பகவாந்தான். இங்கே எல்லாரும் பகவாந்தான்.
அதனால போய் கொடுத்துட்டு வா” என்றார் பகவான்.
அந்த வினாடியிலிருந்து
அவனுக்கு தான்
பிறர் என்றா பேதம் நீங்கியது.
சொல் செயல் எல்லாவற்றிலும்
பதிந்தது. எல்லாரையும் ’ஆண்டவனே!’என்றே அழைப்பான். அதனால் எல்லாரும் அவனை அவன்
பெயரான ’ராமநாதன்’ என்று அழைக்காமல் ஆண்டவனே என்றே அழைத்தார்கள்!
பிற் காலத்தில் பலாக்கொத்தில் தங்கி இருந்த
சாதுக்களுக்கு அவனே
எல்லா வேலைகளையும் செய்து கொடுத்துக்கொண்டு
இருந்தான்.
No comments:
Post a Comment