Pages

Wednesday, March 4, 2015

உள்ளது நாற்பது - 5

 
மும்முதலை யெம்மதமு முற்கொள்ளு மோர்முதலே
மும்முதலாய் நிற்குமென்று மும்முதலு – மும்முதலே
யென்னலகங் கார மிருக்குமட்டே யான்கெட்டுத்
தன்னிலையி னிற்ற றலை.

மும் முதலை எம் மதமும் முன்கொள்ளும் ஓர் முதலே
மும்முதலாய் நிற்கும் என்றும் மும் முதலும் – மும் முதலே
என்னல் அகங்காரம் இருக்குமட்டே யான்கெட்டுத்
தன்னிலையில் நிற்றல் தலை.
முதற்பொருள் என உலகம் ஜீவன், பரம்பொருள் என மூன்று இருப்பதை எல்லா மதங்களும் ஒப்புக்கொள்கின்றன.  அதன் பின் அவை விசாரணை செய்து இருப்பது ஒரே வஸ்து; அதுவே மாயையால் பலதாக தோன்றுகிறது என்றோ அல்லது வெவ்வேறு மூன்று வஸ்துகள் எப்போதும் இருக்கிறன என்றோ நிர்ணயிக்கின்றன. இந்த விசாரணைகளும் முடிவுகளும் அகங்காரம் இருக்கும் போது மட்டுமே இருக்க இயலும். அகங்காரம் ஒழிந்தால் ஒன்று மட்டுமே எஞ்சுகிறது. அது ஆத்ம ஸ்வரூபம். இதில் நிற்பதே நல்லதாகும்.
அகங்காரம் ஒழிந்தால் விசாரணையே இல்லை. இரண்டாவதாக ஒன்றும் தோன்றுவதில்லை.
तत्त्वग्रन्थमाला आरभ्यते जीवजगत्परात्म- तत्त्वाभिधानेन मतं समस्तम् ।
इदं त्रयं यावदहंमति स्यात् सर्वोत्तमाऽहंमतिशून्यनिष्ठा ॥ ४ ॥
|| தத்த்வக்³ரந்த²மாலா ஆரப்⁴யதே ஜீவஜக³த்பராத்ம- தத்த்வாபி⁴தா⁴னேன மதம்ʼ ஸமஸ்தம் |
இத³ம்ʼ த்ரயம்ʼ யாவத³ஹம்ʼமதி ஸ்யாத் ஸர்வோத்தமா()ஹம்ʼமதிஶூன்யனிஷ்டா² || 4 ||


 

No comments: