Pages

Tuesday, March 3, 2015

உள்ளது நாற்பது - 4

 
நூல்
நாமுலகங் காண்டலா னானாவாஞ் சத்தியுள

வோர்முதலை யொப்ப லொருதலையே – நாமவுருச்


சித்திரமும் பார்ப்பானுஞ் சேர்படமு மாரொளியு


மத்தனையும் தானா மவன்.



நாம்உலகம் காண்டலால் நானாவாம் சக்திஉள
ஓர் முதலை ஒப்பல் ஒருதலையே – நாம உரு
சித்திரமும் பார்ப்பானும் சேர்படமும் ஆர்ஒளியும்
அத்தனையும் தானாம் அவன்.
நாம் உலகத்தை சரியானபடி காண்பதில்லை. சில காலம் இருப்பில் இருக்கும் மித்யையான உலகத்தையே காண்கிறோம். ஆகவே நாலாவித சக்தியுள்ள ஒரு முதற்பொருளை நாம் உள்ளதாக ஒப்புக் கொள்கிறோம். ஆனால் பெயரும் உருவமும் கொண்ட படம் போன்ற இந்த ஜகமும் இந்த ஜகத்தை பார்க்கிற ஜீவனும் அந்த ஜகத்தை அறிய ஒளி வீசும் பரம் பொருளும் இந்த படம் தோன்றும் திரையாகவும் இருப்பது ஒரே ஆன்ம ஸ்வரூபமாக உள்ளவனே அந்த முதற்பொருள்.
நாம் உலகத்தை பலவிதமாக காண்கிறோம். இது ஏதோ ஒரு நாள் தோன்றியது; ஏதோ ஒரு நாள் அழிந்தும் போகும். இதன் நிலையற்ற தன்மையை நாம் பார்க்கத்தவறுகிறோம். இதை தோற்றுவித்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்றும் அழிப்பவன் ஒருவன் இருக்க வேண்டும் என்றும் தர்க்க ரீதியாக தோன்றுவதால் அப்படிப் பட்ட பலவித சக்திகளுடன் ஒருவன் இருக்க வேண்டும் என வாதித்து அவனை இறைவன் என்று அழைக்கிறோம். ஆனால் உண்மையில் ஒரே பொருள்தான் இருக்கிறது.
திரைப்படம் காட்டும்போது திரையில் ஒரு சலனச்சித்திரம் தோன்றுகிறது. அது திரையில் ஒரு ஒளி வீசப்பட்டு, அந்த ஒளியில் ஒரு சித்திரம் ஏற்றப்பட்டு அதை ஒருவன் பார்ப்பது போல இருக்கிறது. இது போல ஒரு திரையில் உலகம் தோன்றுகிறது. அதன் தோற்றத்தை ஒரு ஒளிதான் ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த ஒளி அப்படியே திரையில் வீசப்படுவதில்லை. அதன் நடுவில் பிலிம் போல மாயை புகுந்து ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகிறது. இந்த தோற்ற்த்தை ஜீவன் கண்டு களிக்கிறது' கோபப்படுகிறது; சோகப்படுகிறது.
உண்மையில் இப்படி பலப்பல விஷயங்கள் இல்லை. ஒரே பொருளே திரையாகவும் அதில் வீசப்படும் ஒளியாகவும் ஒளியை தோற்றம் மாற்றும் பொருளாகவும் உணரப்படும் உலகமாகவும் அதை பார்க்கின்ற மனிதனாகவும் இருக்கிறது.
सर्वैर्निदानं जगतोऽहमश्च वाच्यः प्रभुः कश्चिदपारशक्तिः ।
चित्रेऽत्र लोक्यं च विलोकिता च पटः प्रकाशोऽप्यभवत्स एकः ॥ ३ ॥
ஸர்வைர்னிதா³னம்ʼ ஜக³தோ()ஹமஶ்ச வாச்ய: ப்ரபு⁴: கஶ்சித³பாரஶக்தி: |
சித்ரே()த்ர லோக்யம்ʼ ச விலோகிதா ச பட: ப்ரகாஶோ()ப்யப⁴வத்ஸ ஏக: || 3 ||

 

No comments: