Pages

Friday, March 20, 2015

உள்ளது நாற்பது - 9


உலகைம் புலன்க ளுருவேறன் றவ்வைம்
புலனைம் பொறிக்குப் புலனா – முலகைமன
மொன்றைம் பொறிவாயா லோர்ந்திடுத லான்மனத்தை
யன்றியுல குண்டோ வறை
உலகு ஐம்புலன்கள்உரு வேறுஅன்று அவ்ஐம்
புலன் ஐம்பொறிக்குப் புலனாம் – உலகை மனம்
ஒன்று ஐம்பொறிவாயால் ஓர்ந்திடுதலால் மனத்தை
அன்றிஉலகு உண்டோ அறை

உலகை நாம் காணல், கேட்டல், நுகர்தல், தொடுதல், சுவைத்தல் ஆகிய ஐம்புலன்கள் வாயிலாகத்தான் அறிகிறோம். அவை உருவாக்கும் படமே உலகம். மனதே கண் காது முதலான ஐம்பொறிகளின் வாயிலாக இவற்றை அறிகிறது. ஆகவே மனத்தை தவிர்த்த உலகு உள்ளதோ எனக்கூறுவாயாக.
शब्दादिरूपं भुवनं समस्तं शब्दादिसत्तेन्द्रियवृत्तिभास्या ।
सत्तेन्द्रियाणां मनसो वशे स्यात् मनोमयं तद्भुवनं वदामः ॥ ८ ॥
ஶப்³தா³தி³ரூபம்ʼ பு⁴வனம்ʼ ஸமஸ்தம்ʼ ஶப்³தா³தி³ஸத்தேந்த்³ரியவ்ருʼத்திபா⁴ஸ்யா |  ஸத்தேந்த்³ரியாணாம்ʼ மனஸோ வஶே ஸ்யாத் மனோமயம்ʼ தத்³பு⁴வனம்ʼ வதா³ம​: ||  8 ||  

 

No comments: