Pages

Friday, March 27, 2015

ரமணர் - அடியார்கள் 7




ஹம்ப்ரீஸ் தனக்கு சித்திகள் மேல் நாட்டம் இருப்பதைப் பற்றி பகவானிடம் ஒரு முறை சொல்லலானார். பகவானிடம் மிக உயர்ந்த சித்தி எது? அதை எப்படி அடைவது என்று கேட்டார்.
பகவான்நாம் நாமாக இருக்கறதே மிக உயர்ந்த சித்தி, இது யாருக்குமே தெரியலே. எப்பவும் மிக உயர்ந்ததையே நாடணும், இல்லையா? அது உயர்ந்ததா இருந்தால் மட்டும் போதாது. அதுக்கும் மேலே ஒண்ணும் இருக்கக்கூடாது. அப்படிப்பட்டது நீங்களேதான். உங்களோட உண்மையை தெரிஞ்சுக்குங்க. அதுவே எல்லாத்தையும் விட மேலான சித்தி. அது முழுக்க சரணடைந்தால் மட்டுமே வரும். வேற வழியே இல்லை!” என்றார்.
இது பற்றி ஹம்ப்ரீஸ் டைரியில் எழுதும் போது நல்ல கத்தோலிகனாக திரும்பினேன்!’ என்று குறிக்கிறார்.

சில மாதங்கள் கழித்து ஹம்ப்ரீஸ் மீண்டும் பகவானை தரிசிக்க வந்தார். ஒரு முடிவுக்கான உத்திரவை எதிர்பார்த்து வந்தார் போலும். பகவான் எதிரில் ஒன்றுமே பேசாமல் அமர்ந்தார். பகவான் வேறு ஏதும் சொல்லாமல் சரி, போகலாம்.” என்றார். ஹம்ப்ரீஸ் அமைதியாக விடை பெற்றார்.
உடன் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

தான் பார்த்து வந்த போலீஸ் அதிகாரி வேலையை துறந்துவிட்டு தன் நாட்டுக்குச் சென்று ஒரு சாதாரண கத்தோலிக துறவியாக வாழ்வை நிம்மதியாக கழித்தார்.

 

No comments: