Pages

Saturday, March 28, 2015

உள்ளது நாற்பது -11

 
எப்பெயரிட் டெவ்வுருவி லேத்தினுமார் பேருருவில்
அப்பொருளைக் காண்வழிய தாயினுமம் – மெய்ப்பொருளி
னுண்மையிற்ற னுண்மையினை யோர்ந்தொடுங்கி யொன்றுதலே
உண்மையிற் காணலுணர்.
எப்பெயர் இட்டு எவ்வுருவில் ஏத்தினும் ஆர்பேர் உருவில்
அப்பொருளைக் காண் வழிஅது ஆயினும் அம் – மெய்ப் பொருளின்
உண்மையில் தன் உண்மையினை ஓர்ந்து ஒடுங்கி ஒன்றுதலே
உண்மையில் காணல் உணர்.
அம்மெய்ப்பொருளுக்கு உருவமில்லை; பெயரில்லை. இருந்தாலும் எந்த பெயரைச்சொல்லியும் எந்த உருவில் ஏற்றியும் இதை துதித்து த்யானித்தாலும் அந்த பொருளில் அதைக் காண அது வழியாக இருக்கிறது. இருப்பினும் அது உண்மையில் அதை கண்டதாக ஆகாது. அந்த சத்திய வஸ்துவில் தன் அகங்காரம் உதித்து ஒடுங்குவதை உணர்ந்து அவ்வஸ்துவில் ஒடுங்கி இரண்டில்லாமல் ஒன்றுவதே அதை உண்மையில் காண்பதாகும் என உணர்வாயாக!
भवन्तु सद्दर्शनसाधनानि परस्य नामाकृतिभिः सपर्या ।
सद्वस्तुनि प्राप्तदात्मभावा निष्ठैव सद्दर्शनमित्यवेहि ॥ १० ॥
ப⁴வந்து ஸத்³³ர்ஶனஸாத⁴னானி பரஸ்ய நாமாக்ருʼதிபி⁴: ஸபர்யா | ஸத்³வஸ்துனி ப்ராப்ததா³த்மபா⁴வா நிஷ்டை²வ ஸத்³³ர்ஶனமித்யவேஹி || 10 ||

 

No comments: