Pages

Tuesday, March 17, 2015

உள்ளது நாற்பது - 8


உடல்பஞ்ச கோச வுருவதனா லைந்து
முடலென்னுஞ் சொல்லி லொடுங்கு – முடலன்றி
யுண்டோ வுலக முடல்விட் டுலகத்தைக்
கண்டா ருளரோ கழறு.
உடல்பஞ்ச கோசஉரு அதனால் ஐந்தும்
உடல் என்னும் சொல்லில் ஒடுங்கும் – உடலன்றி
உண்டோ உலகம் உடல்விட்டு உலகத்தை
கண்டார் உளரோ கழறு.
உடல் என்பது ஐந்து கோசங்களால் ஆனது. அவை அன்ன மய கோசம், ப்ராண மய கோசம், மனோ மய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆன்ந்த மய கோசம் என்பன, இந்த அன்ன மய கோசம் என்பதே நாம் சாதாரணமாக உடல் என்னும் ஸ்தூலமான உடலாகும். ஆன்ந்த மய கோசம் காரண சரீரம் ஆகும். இடையில் உள்ள மூன்றும் சூக்ஷ்ம சரீரமாகும். இவை ஐந்துமே உடல் என்பதில் அடங்கும். இந்த உடல் இல்லாமல் உலகம் இல்லை. இந்த ஐந்தும் இல்லை என்றால் உலகமும் இல்லை. கண் வழியே உலகை காணும் மனமும் இதில் அடக்கமல்லவா? ஆகவே இந்த மனமில்லது உலகமும் இல்லை. அப்படி கண்டவர் யாருமுண்டோ சொல்வாய்!

यत्पञ्चकोशात्मकमस्ति देहं तदन्तरा किं भुवनं चकास्ति ।
देहं विना पञ्चविधं तदेतत् पश्यन्ति के वा भुवनं भणन्तु ॥ ७ ॥
யத்பஞ்சகோஶாத்மகமஸ்தி தே³ஹம்ʼ தத³ந்தரா கிம்ʼ பு⁴வனம்ʼ சகாஸ்தி | 
தே³ஹம்ʼ வினா பஞ்சவித⁴ம்ʼ ததே³தத் பஶ்யந்தி கே வா பு⁴வனம்ʼ ப⁴ணந்து ||  7 ||

 

No comments: