அறியாமை
விட்டறிவின் றாமறிவு விட்டவ்
வறியாமை
யின்றாகு மந்த – வறிவு
மறியா
மையுமார்க்கென் றம்முதலாந்
தன்னை
யறியு
மறிவே யறிவு.
அறியாமை
விட்டு அறிவுஇன்றாம்
அறிவுவிட்டுஅவ்
அறியாமை
இன்றுஆகும் அந்த – அறிவும்
அறியாமையும்
ஆர்க்குஎன்று அம்முதலாம்
தன்னை
அறியும்
அறிவே அறிவு.
தன்னைத்தான்
சரியாக அறியாதது அஞ்ஞானம்
என்னும் அறியாமை.
இது
இல்லாமல் நான் என்ற உணர்வு
இருப்பதில்லை.
இந்த
நான் உணர்வு இல்லாமல் அஞ்ஞானமும்
இருப்பதில்லை.
இவ்விரண்டும்
யாருக்கு உண்டாகின்றன என்று
விசாரித்து அறிந்து அறியாமையும்
அறிவும் எங்கே உதிக்கின்றன,
எங்கே ஒடுங்குகின்றன என்று
பார்த்து அந்த மூல வஸ்துவின்
ஸ்வரூபத்தை உணர்ந்து அறிதலே
உண்மை அறிவாகும்.
विद्या
कथं भाति न चेदविद्या विद्यां
विना किं प्रविभात्यविद्या
।
द्वयं
च कस्येति विचार्य मूल-
स्वरूपनिष्ठा
परमार्थविद्या ॥ १२ ॥
வித்³யா
கத²ம்ʼ
பா⁴தி
ந சேத³வித்³யா
வித்³யாம்ʼ
வினா
கிம்ʼ
ப்ரவிபா⁴த்யவித்³யா
|
த்³வயம்ʼ
ச
கஸ்யேதி விசார்ய மூல-
ஸ்வரூபனிஷ்டா²
பரமார்த²வித்³யா
||
12 ||
No comments:
Post a Comment