அறிவறி யாமையு மற்றதறி வாமே
யறியும துண்மையறி வாகா – தறிதற்
கறிவித்தற் கன்னியமின் றாயவிர்வ தாற்றா
னறிவாகும் பாழன் றறி
அறிவு அறியாமையும் அற்றது அறிவாமே
அறியும் அது உண்மை அறிவு ஆகாது – அறிதற்கு
அறிவித்தற்கு அன்னியம் இன்றாய் அவிர்வதால் தான்
அறிவாகும் பாழ்அன்று அறி
உலக அறிவும் அஞ்ஞானமும் இல்லாததே அறிவாகும். அது எதையும் அறிகிறது எனில் அது அறிவாகாது. மெய்ப்பொருள் தன்னை நீங்கி பிறிதொன்று இல்லை என்பதால் அறிவதற்கோ அறிந்தேன்
என்று சொல்வதற்கோ ஒன்றுமே இல்லை. இந்நிலையில்
அது இருந்து ஒளிர்வதால் அது பேரறிவாகும்; பாழ் அல்ல
என அறிவாயாக.
निद्रा न विद्या ग्रहणं न विद्या गृह्णाति किञ्चिन्न यथार्थबोधे ।
निद्रापदार्थग्रहणेतरा स्यात् चिदेव विद्या विलसन्त्यशून्या ॥ १४ ॥
நித்³ரா ந வித்³யா க்³ரஹணம்ʼ ந வித்³யா க்³ருʼஹ்ணாதி கிஞ்சின்ன யதா²ர்த²போ³தே⁴ |
நித்³ராபதா³ர்த²க்³ரஹணேதரா ஸ்யாத் சிதே³வ வித்³யா
விலஸந்த்யஶூன்யா || 14 ||
No comments:
Post a Comment