ஞானமாந் தானேமெய் நாநாவா ஞானமஞ்
ஞானமாம் பொய்யாமஞ் ஞானமுமே – ஞானமாந்
தன்னையன்றி யின்றணிக டாம்பலவும் பொய்மெய்யாம்
பொன்னையன்றி யுண்டோ புகல்.
ஞானமாம்தானே மெய் நாநாவாம் ஞானம்அஞ்
ஞானமாம் பொய்யாம் அஞ்ஞானமுமே – ஞானமாம்
தன்னைஅன்றிஇன்று அணிகள்தாம் பலவும்பொய் மெய்யாம்
பொன்னை அன்றி உண்டோ புகல்.
தங்கத்தால் பல அணி ஆபரணங்கள் செய்திருந்தால் அவை பலவாக அழைக்கப்படுகின்றன. இருப்பினும் அவை அனைத்தும் தங்கமே. வேறல்ல. அதே போல ஞானம் ஒன்று மட்டுமே மெய்ப்பொருளாக இருக்கிறது. நாலா விதமாக ஞானம் எனத் தோன்றினாலும் அவை அனைத்தும் அஞ்ஞானத்தில் விளைந்தனவே; ஆகையால் பலவாய்த் தோன்றும் அவையும் அஞ்ஞானமே. அவை அனைத்தும் ஒரே ஞானப்பொருளே.
பல மதத்தினர் மெய்ப்பொருள் என ஒன்று உள்ளது என்பதை ஒப்புக்கொள்கின்றனர். இருந்தாலும் அதற்கு அவரவர் தம் வழியில் ஒரு பெயரையோ உருவத்தையோ கொடுத்துக்கொள்கின்றனர். இந்த பெயரையும் உருவத்தையும் நீக்கிப்பார்க்கையில் எல்லாமே ஒரே மெய்ப்பொருள்தான்.
सत्यश्चिदात्मा विविधाकृतिश्चित् सिध्येत्पृथक्सत्यचितो न भिन्ना ।
भूषाविकाराः किमु सन्ति सत्यं विना सुवर्णं पृथगत्र लोके ॥ १५ ॥
ஸத்யஶ்சிதா³த்மா விவிதா⁴க்ருʼதிஶ்சித் ஸித்⁴யேத்ப்ருʼத²க்ஸத்யசிதோ ந பி⁴ன்னா |
பூ⁴ஷாவிகாரா: கிமு ஸந்தி ஸத்யம்ʼ வினா ஸுவர்ணம்ʼ ப்ருʼத²க³த்ர லோகே || 15 ||
No comments:
Post a Comment