Pages

Wednesday, April 8, 2015

உள்ளது நாற்பது - 14


அறிவுறுந் தன்னை யறியா தயலை
யறிவ தறியாமை யன்றி யறிவோ
வறிவயற் காதாரத் தன்னை யறிய
வறிவறி யாமை யறும்.

அறிவுஉறும் தன்னை அறியாது அயலை
அறிவது அறியாமை அன்றி அறிவோ
அறிவு அயற்கு ஆதாரத் தன்னைஅறிய
அறிவு அறியாமை அறும்.

உலகை அறியும் ஜீவன் தன் உண்மையான ஸ்வரூபத்தை அறியாது வேறாக இருக்கும் உலகத்தை தான் என அறிவது அறியாமைத் தவிர வேறு என்ன? உண்மை ஞானமாக ஆகுமா? இந்த உலகை அறியும் உணர்வுக்கும் உலகுக்கும் ஆதாரமாக இருப்பது எது என்று அறிய அஞ்ஞாமும் தான் எனும் உணர்வும் அறுந்து போகும்.

बोद्धारमात्मानमजानतो यो बोधः स किं स्यात्परमार्थबोधः ।
बोधस्य बोध्यस्य च संश्रयं स्वं विजानतस्तद्द्वितयं विनश्येत् ॥ १३
போ³த்³தாரமாத்மானமஜானதோ யோ போ³: ஸ கிம்ʼ ஸ்யாத்பரமார்த²போ³: | 
போ³ஸ்ய போ³த்யஸ்ய ச ஸம்ʼஶ்ரயம்ʼ ஸ்வம்ʼ விஜானதஸ்தத்³த்³விதயம்ʼ வினஶ்யேத் ||  13 ||


No comments: