தன்மையுண்டேன் முன்னிலைப டர்க்கைக டாமுளவாந்
தன்மையி னுண்மையைத் தானாய்ந்து – தன்மையறின்
முன்னிலைப டர்க்கை முடிவுற்றொன்றா யொளிருந்
தன்மையே தன்னிலைமை தான்.
தன்மைஉண்டேல் முன்னிலை படர்க்கைகள்தாம் உளவாம்
தன்மையின் உண்மையைத்தான் ஆய்ந்து – தன்மை
அறின்
முன்னிலை படர்க்கை முடிவுற்று ஒன்றாய்ஒளிரும்
தன்மையே தன் நிலைமை தான்.
அகங்காரத்தால் நான் என்று தன்மை தோன்றுவதால் நீ என
முன்னிலையும் அவன் என படர்க்கையும் தோன்றுகின்றன. அந்த ’நான்’ யார் என்று
விசாரித்து அதன் உண்மைத்தன்மையை அறிய ’நான்’ என்னும் தன்மை போய்விடுகிறது. தன்மை
போனால் முன்னிலையும் படர்க்கையும் காணாமல் போவது இயல்பே. அதன் பின் எஞ்சி ஒளிர்வது
ஒன்றாக இருக்கும் ஒரே பொருளே. இதுவே யதார்த்த நிலையாகும்.
तद्युष्मदोरस्मदि सम्प्रतिष्ठा तस्मिन् विनष्टेऽस्मदि
मूलबोधात् ।
तद्युष्मदस्मन्मतिवर्जितैका स्थितिर्ज्वलन्ती
सहजात्मनः स्यात् ॥ १६ ॥
தத்³யுஷ்மதோ³ரஸ்மதி³ ஸம்ப்ரதிஷ்டா² தஸ்மின் வினஷ்டே(அ)ஸ்மதி³ மூலபோ³தா⁴த் |
தத்³யுஷ்மத³ஸ்மன்மதிவர்ஜிதைகா
ஸ்தி²திர்ஜ்வலந்தீ ஸஹஜாத்மன: ஸ்யாத் || 16 ||
No comments:
Post a Comment