பக்தர் ஒருவர் தன் நண்பரை அழைத்து வந்தார். வந்தவர் “பகவானை நமஸ்கரிக்க மாட்டேன்; என்னை கட்டாயப்படுத்தாவிட்டால் வருகிறேன் “ என்று கூறியிருந்தார்.
பக்தரும் அதற்கு ஒப்புக்கொண்டு
இருந்தார்.
நண்பர் ஹாலுக்குள் வரவே இல்லை. வெளியேவே அமர்ந்து இருந்தார். கொஞ்சம் அங்கே இங்கே என்று
சுற்றித்திரிந்தார். மாலையில்
வழக்கம் போல கிணற்றுக்கு பக்கத்தில் சேர் போடப்பட்டது. பகவான் வந்து அமர்ந்தார். பக்தர்கள் அவரைச் சுற்றி அமர்ந்தனர்.
அப்போது அங்கே அந்த நண்பர் வந்தார்.
பகவானைப் பார்த்தவுடன் தடாலென்று
வீழ்ந்து வணங்கினார்.
பகவான் பலமாக சிரித்தார்! இருவரைத்தவிர மற்றவர்களுக்கு அதன்
காரணம் தெரியவில்லை!
டெய்லர்ஸ் அமெரிக்க தம்பதியினர்.
டெய்லர் ஓய்வு பெற்ற பேராசிரியர்.
ஆசிரமத்துக்கு வந்து பகவானை
தரிசித்தனர். பகவானிடம்
மிகவும் நெருங்கியவர்களாக உணர்ந்தார்கள்.
ஒரு நாள் அவரது மனைவி பகவானிடம்
உரிமையுடன் “பகவானே!
எனக்கு ஆத்ம ஞானம் கொடுங்க” என்று கேட்டார்.
“காலத்துலே எல்லாம் வரும். பொறுமையா இருங்க!”
“இல்லை, இப்பவே வேணும்.”
“நீங்க தயார் ஆகும்போது அது தானே வரும்.”
“பகவானே நீங்க நினைச்சா இப்பவே தரலாம்!”
பகவான் ஒன்றும் பேசாமல் உற்று
நோக்கினார்.
இரண்டே நிமிடங்களில் அவர் அழுது
கதறியபடி ஹாலை விட்டு வெளியே ஓடினார்!
என்ன ஆயிற்று என்று யாரிடமும்
சொல்லவில்லை!
No comments:
Post a Comment