Pages

Monday, July 13, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 38


ஸ்ரீ மாத்ரு பூதேஸ்வர கோவிலில் மேருவுக்கு தாமிர கவசம் செய்து வெள்ளி முலாம் பூசிக் கொடுத்து நன்கொடை செய்ய ஒரு சென்னை அன்பர் வந்திருந்தார். ஆபீஸில் விண்ணப்பித்தார்.
நிர்வாகத்தினர் முழுதும் வெள்ளியில் செய்து தருவதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். அவர் ஏனோ தயங்கினார். தாமிர கவசத்தை தருவதிலேயேமுனைப்பு காட்டினார். நிர்வாகம் முழுதும் வெள்ளி என்பதில் உறுதியாக இருந்தது. சின்னஸ்வாமி தன் ஆபீஸில் இருந்து ஒருவரையும் அன்பரையும் பகவானிடம் அனுப்பி அவரது கருத்தை கேட்டு வருமாறு சொன்னார்.
இருவரும் போனார்கள். பகவான் இருவர் சொன்னதையும் கேட்டுவிட்டு என்னை ஏன் கேக்கறேள். ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ ஒண்ணை தீர்மானம் செய்யுங்கோ!” என்றார்.
இந்த பதிலில் சின்னஸ்வாமிக்கு திருப்தி இல்லை. ஆபீஸில் இருந்து சென்றவரை கடிந்து கொண்டு பகவானுக்கு எது இஷ்டம்ன்னு போய் சரியா கேட்டுண்டு வாங்கோஎன்றார்.
அதே வேகத்தில் ஆபீஸ் அன்பர் சென்று பகவான் முன் நின்றார். “பகவானோட இஷ்டத்தை கேட்டு தெரிஞ்சுண்டு வரச்சொன்னார்என்றார்.
பகவான் நிதானமாக எனக்கு எது இஷ்டமா? நான் யார்ன்னு தெரிஞ்சுண்டு எது நடக்குமோ அது நடக்கும், எது நடக்காதோ அது நடக்காதுன்னு சும்மா இருக்கறதே என் இஷ்டம்ன்னு போய்ச் சொல்லுங்கோ!” என்றார்.

ஒருமுறை ஏழைக்கிழவி ஒருத்தர் கந்தலாடையில் தயங்கியபடியே ஆசிரமத்துக்குள் நுழைந்தார். சுமார் 75 வயது இருக்கலாம். கையில் ஒரு சிறிய பாத்திரம். பழைய ஹாலில் பகதர் கூட்டம். பகவான் இருக்கும் இடம் தெரியவில்லை. கையை கண்களுக்கு மேலே வைத்துக்கொண்டு கண்களை இடுக்கிக்கொண்டு தேடினார். பகவானை பார்த்துவிட்டார். ஆனந்தம் பொங்கி வழிந்தது! “வரணும் வரணும்ன்னு நினைப்பேன் சாமி! இன்னைக்குத்தான் முடிஞ்சதுஎன்றபடி வீழ்ந்து கும்பிட்டார். எழுந்த பின் எவ்வளவு காலமாச்சு என்றபடி மீண்டும் வீழ்ந்து கும்பிட்டார்.
இருபத்தாறு வருஷம் கழிச்சு இப்போதான் வந்திருக்கே!” என்று பகவான் சொன்ன போது அவருடைய கண்களில் பாட்டியை விட ஆனந்தம் பொங்கியதாக தோன்றியது!
எனக்கு என்ன கொண்டு வந்தே? கொடு சாப்பிடறேன்!” என்றார்.
கூடியிருந்தோருக்கு பெரிய ஆச்சரியம்!
தேன் கொண்டு வந்தேன் சாமி! இந்தாஎன்று பாத்திரத்தை நீட்டினார்.
அபோது பகவான் அசகாயமான குரலில் யாரேனும் சாப்பாடு கொடுத்தா நல்லாயிருக்கும்என்றார்.
சின்னஸ்வாமி கிழவியை சாப்பிட கூட்டிப்போனார்.
அவர் போனதும் தன் வாழ்நாளில் யாரிடமும் எதுவும் கேட்காத பகவான் மிகவும் தயங்கியபடி யாராவது அவளுக்கு புடவை வாங்கித்தரேளா?” என்று கேட்டார். சொல்லி முடிக்கும் முன் நான் நீ என்று பலரும் போட்டி போட்டுக்கொண்டு ஓடினார்கள். பகவான் மெதுவாக விலை உசந்தது எல்லாம் வேண்டாம். சாதா புடவையே போறும்என்றார். இரண்டு புடவைகள் வந்தன.
சாப்பிட்டு முடித்த பாட்டி விடை பெற வந்தார்.
பாட்டி யாரோ பிரியப்பட்டு புடவை வாங்கி கொடுத்து இருக்கா! வாங்கிக்கோ!” என்றார் பகவான். சேவகர் தந்த புடவையை வாங்க அவர் மறுத்தார்.
இப்போது பகவான் பாட்டி! நானே தரேன்! தயவு செஞ்சு வாங்கிக்கோ!” என்ற போது குரல் தாசானுதாசன் போல் இனித்தது.
பாட்டி புடவையை சந்தோஷமாக வாங்கிக்கொண்டு விடை பெற்றார்!
 

No comments: