நாமுடலென் றெண்ணினல நாமதுவென்
றெண்ணுமது
நாமதுவா நிற்பதற்கு நற்றுணையே - யாமென்றும்
நாமதுவென் றெண்ணுவதே னான்மனித
னென்றெணுமோ
நாமதுவாய் நிற்குமத னால்.
நாம்உடல்என்று
எண்ணின்அலம்நாம்அதுஎன்று எண்ணும்அது
நாம் அதுவாய் நிற்பதற்கு நல்துணையே - ஆம்என்றும்
நாம்அதுஎன்று எண்ணுவதுஏன்
நான்மனிதன்என்று எணுமோ
நாம்அதுவாய் நிற்கும் அதனால்.
நாம் தேகம் என்று மனம் எண்ணும்
போது, 'நாம் தேகம் இல்லை; நாம் ஆன்ம ஸ்வரூபமே' என்று நினைப்புக்கு கொண்டு
வரும் வழியானது, நாம் அந்த ஆன்ம ஸ்வரூபத்தில்
இருக்க நல்ல துணையாகும் என்று எண்ணி நம்மை அப்படி ஆன்ம ஸ்வரூபமாக பாவிப்பது எதற்கு? நான் மனிதன் என்று ஒருவன்
உணர்வதற்கு யாரும் நான் மனிதன் என்று பாவிக்கிறார்களா? ஆகவே நம்மை அறிவதற்கு
இப்படி அப்படி என பாவனைச் செய்தல் தேவையில்லை.
सोऽहंविचारो वपुरात्मभावे साहाय्यकारी परमार्गणस्य ।
स्वात्मैक्यसिद्धौ स पुनर्निरर्थो यथा नरत्वप्रमितिर्नरस्य ॥ ३८ ॥
ஸோ(அ)ஹம்ʼவிசாரோ வபுராத்மபா⁴வே ஸாஹாய்யகாரீ பரமார்க³ணஸ்ய |
ஸ்வாத்மைக்யஸித்³தௌ⁴ ஸ புனர்னிரர்தோ² யதா² நரத்வப்ரமிதிர்னரஸ்ய || 38 ||
No comments:
Post a Comment