அதுநீயென்
றம்மறைக ளார்த்திடவுந் தன்னை
யெதுவென்று
தான்றேர்ந் திராஅ -
ததுநா
னிதுவன்றென்
றெண்ணலுர னின்மையினா லென்று
மதுவேதா
னாயமர்வ தால்.
அதுநீ
என்று அம்மறைகள் ஆர்த்திடவும்
தன்னை
எதுஎன்று
தான்தேர்ந்து இராது -
அதுநான்
இதுஅன்று
என்றுஎண்ணல் உரன் இன்மையினால்என்றும்
அதுவே
தானாய் அமர்வதால்.
வேதங்கள்
அதுவே நீ (தத்வமஸி)
என்று
உரக்கச்சொல்கின்றன.
அந்த
அது எது என்று விசாரித்து
தான் அங்கேயே அமர்ந்திடாமல்
'நான்
இந்த உடலல்ல;
நான்
அந்த பிரம்ம ஸ்வரூபம் என்று
இன்னொரு இயல்பை கற்பித்தல்
மனோதிடமென்னும் விவேக வலிமை
இல்லாததால் நடக்கிறது.
எப்போதும்
ஆன்மாவாகிய அப்பிரம்மமே
தானாக அமர்ந்திருக்கிறது.
आह
स्फुटं तत्त्वमसीति वेद-
स्तथाप्यसम्प्राप्य
परात्मनिष्ठाम् ।
भूयो
विचारो मतिदुर्बलत्वं तत्सर्वदा
स्वात्मतया हि भाति ॥ ३४ ॥
ஆஹ
ஸ்பு²டம்ʼ
தத்த்வமஸீதி
வேத³-
ஸ்ததா²ப்யஸம்ப்ராப்ய
பராத்மனிஷ்டா²ம்
|
பூ⁴யோ
விசாரோ மதிது³ர்ப³லத்வம்ʼ
தத்ஸர்வதா³
ஸ்வாத்மதயா
ஹி பா⁴தி ||
34 ||
No comments:
Post a Comment