சாதகத்தி லேதுவிதஞ் சாத்தியத்தி
லத்துவித
மோதுகின்ற வாதமது முண்மையல – வாதரவாய்த்
தான்றேடுங் காலுந் தனையடைந்த
காலத்துந்
தான்றசம னன்றியார் தான்.
சாதகத்திலே துவிதம் சாத்தியத்தில்
அத்துவிதம்
ஓதுகின்ற வாதம்அதும் உண்மைஅல – ஆதரவாய்த்
தான் தேடுங்காலும் தனைஅடைந்த
காலத்தும்
தான்தசமன் அன்றியார் தான்.
ஒருவன் சாதனை செய்யும் காலத்தில்
தான், பிறர் என இரண்டு உண்டு என்றும்; அவன் சாதனை செய்து தனனி
அறியும்போது இரண்டும் ஐக்கியமாகி ஒன்றே உள்ளது என்றும் சிலர் கூறுகிறார்கள். அப்படி இல்லை. தன்னை மறந்தவன் தேடும்
காலத்திலும் ஒருவனே; தேடி தன்னை அடைந்த காலத்திலும்
ஒருவனாகவே இருக்கிறான்.அப்படி இல்லாமல் இரண்டு பேர்களா இருப்பர்?
பத்தாவது மனிதன் கதை: பத்து நண்பர்கள் போகும்
வழியில் வெள்ளம் ஓடும் ஆற்றை கடந்தனர். எல்லாரும்
கரையேறிவிட்டார்களா என்று கணக்கிட்ட ஒருவன் தன்னை விட்டுவிட்டு மற்றவர்களை எண்ணி
ஒருவனைக்காணவில்லை என்று துக்கித்தான். வழிப்போக்கன் ஏன்
அழுகிறான் என்று கேட்டு பின் நடந்ததை ஊகித்து காணாமல் போன பத்தாவது மனிதன் நீயே
என்று உணர்த்தினான். அதை உணர்ந்த அளவில் துக்கம்
நீங்கிற்று!
द्वैतं विचारे परमार्थबोधे त्वद्वैतमित्येष न साधुवादः ।
गवेषणात्प्राग्दशमे विनष्टे पश्चाच्च लब्धे दशमत्वमेकम् ॥ ३९ ॥
த்³வைதம்ʼ விசாரே பரமார்த²போ³தே⁴ த்வத்³வைதமித்யேஷ ந
ஸாது⁴வாத³: |
க³வேஷணாத்ப்ராக்³த³ஶமே வினஷ்டே
பஶ்சாச்ச லப்³தே⁴ த³ஶமத்வமேகம் || 39 ||
No comments:
Post a Comment