பகவானும் சுந்தரமும் ஒரு நாள் காலை சமையலறையில் காய்கறி நறுக்கிக்கொண்டு இருந்தார்கள். பாதி வேலை நடந்து கொண்டு இருக்கும்போதே பகவான் “சுந்தரம் மரத்தடில நிறைய மாம்பிஞ்சு கொட்டிக்கிடக்கு. கொஞ்சம் கொண்டு வா!” என்றார். சுந்தரம் ‘உம்’ என்றாரே ஒழிய அசையவில்லை. கை வேலையை முடித்துப் பின் போகலாம் என்று நினைத்தார். பகவான் “சுந்தரம், இங்கே சர்வமும் நாந்தான்! சொன்னதை உடனே செய்!” என்றார்.
இந்த
சுந்தரம்தான் பிற்காலத்தில் திரிவேணி ஸ்வாமியாக அழைக்கப்பட்டார். இந்த
நிகழ்ச்சியை பற்றி பிற்காலத்தில் அவர் சொன்னார்:
முதல்ல
பகவான்கிட்ட வந்தப்ப அவர் ஒரு நல்ல மனுஷன் என்கிறதுதான் என்னோட அபிப்ராயம். ஒரு நாள் அவர்
என்னை மாங்காய் எடுத்துண்டு வரச்சொன்னார். அன்னைலேர்ந்து
நான் சாட்சாத் இறைவனோட சன்னிதியில இருக்கேன் என்கிறது புத்தியைத் தாண்டி புரிஞ்சது. பகவானோட
இருந்தது மட்டுமே என் ஆன்மீக சாதனை.
முதல் பாடமா
பகவான்கிட்டே நான் படிச்சது என்னோட சுய சிந்தனையை தூக்கிபோட்டுட்டு அவர்
சொல்லறதுக்கு மறுப்பில்லாமே கீழ்ப்படியறதுதான்.
எந்த ஒரு
வேலையிலும் பகவான் சொல்கிற வழியை விட சிறப்பா செய்யக்கூடிய வழி இருக்கலாம்; பகவான்
சொல்கிற வழியில செய்யறதாலே அந்த காரியமே கெட்டும் போகலாம். இப்படி
எல்லாம் தோணினாலும் கேள்வி கேட்காமல் பகவான் சொல்லறதை செய்யறதுதான் ஆன்மீகத்தோட
ரகசியம்! யாருக்கு இது கைவரப்பெற்று இருக்கோ அவனுக்கு ஆத்ம ஞானமும் தூறவும்
கரதலக்கனி!
துறவு
என்கிறது குருகிட்டே நம்ம அபிப்ராயத்தை துறக்கிறதுதான்! அதேதான் ஆத்ம
ஞானமும்!
No comments:
Post a Comment