Pages

Friday, July 17, 2015

இறுதி நாட்கள் - 1


பகவானின் இறுதி நாட்களில் மார்ச் 2 ஆம் தேதி பகவான் பகலில் ஏதும் உட்கொள்ளவில்லை.
அதை தெரிந்து கொண்ட பக்தர் ஒருவர் பகவானே ஒண்ணுமே சாப்பிடாம இருக்கேளே? கொஞ்சம் பாயசமாவது சாப்பிடுங்கோ! இன்னைக்கு அது நல்லா இருக்கு!” என்றார்.
பகவான் அவரை சமாதானப் படுத்தி அனுப்பிவிட்டு நான் பாயசம் சாப்பிடலையேன்னு இவாளுக்கு எல்லாம் வருத்தம்…. இவா எல்லாம் விஞ்ஞான ஆகாரம் சாப்பிடலையேன்னு எனக்கு வருத்தம். என்ன செய்யறது? யார் யாருக்கு என்ன விதிச்சு இருக்கோ அதானே வாய்க்கும்?” என்றார்.

1950மார்ச் 18 ஆம் தேதி சூரி நாகம்மா மாலையில் புதிய துண்டு ஒன்றையும் கௌபீணத்தையும் எடுத்துக்கொண்டு பகவானை பார்க்கச்சென்றார்.
பகவன் முகத்தை சலனமில்லாமல் நோக்கினார். வஸ்திரங்களை மேசை மேலே வைத்துவிட்டு நாளைக்கு யுகாதிஎன்றார்.
பகவான் ஆச்சரியத்துடன் ஓஹோ! யுகாதியா? விக்ருதி வந்துடுத்தாஎன்றார் தீர்க்க தரிசனத்துடன்.
நாகம்மா கை எப்படி இருக்கு பகவானே? உம் என்னத்தை சொல்லறது? நீங்களேதான் எப்படியாவது குணப்படுத்திக்கணும்!” என்றார்.
உம் குணமாகறது என்ன?… இன்னும் என்ன குணம்?” என்றார் பகவான்.

பகவானின் இறுதி நாட்களில் நிர்வாகத்தில் பல பிரச்சினைகள். அன்பர்களுக்கு வருத்தம். ஆசிரமத்தின் எதிர்காலம் குறித்து கவலை. பகவானிடம் முறையிட்டனர்.
பகவானே! நீங்க இல்லாம சின்னஸ்வாமியால நிர்வாகம் செய்ய முடியுமா? ஆசிரமத்தை நல்லா நடத்த முடியுமா?”
பகவான் சொன்னார்: “இப்ப சின்னஸ்வாமியா நடத்தறதா நினைக்கறேள்? இல்லை வேற யாரோவா? ஆசிரமத்தை நடத்தறது யாருன்னு நினைக்கறேள்? ஒரு மஹா சக்திதான் நடத்தறது. அதுவே தொடர்ந்து நடத்தும்என்றார் உறுதியான குரலில்.
 

No comments: