சர்மாஜியின் திருமண வாழ்க்கை தொடர்ந்தது. காலப்போக்கில் ஒரு மகன் பிறந்தார். தனது மகனின் ஜாதகத்தை
கணித்துப்பார்கையில் அவரது மகன் இளம் வயதிலேயே இறக்க வேண்டும் என்று தெரியவந்தது. அது மோசமாக அதிர்ச்சியாக இருந்தது. இதை அவர் தன்
மனைவியிடம் சொல்லவில்லை.
ஜோசியம் என்னும் இலாபகரமான தொழிலை விட்டு விட்டு திருவண்ணாமலைக்கு
அவரது குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார். தொலைவில் உள்ள ஒரு பள்ளியில் அவரது மகன் பாலுவை சேர்த்தார்.
அடி அண்ணாமலையில் ஒரு எளிய வாழ்க்கை தொடங்கியது. தினசரி அவர் அவரது மனைவியுடன் கிரி வலம் போவார். வழியில் பகவானை தரிசிப்பார். ஆசிரமத்தில் கோவிலில்
அர்ச்சகர் வேலையை ஏற்கும்படி வேண்டினர். ஆனால் அதை நிராகரித்தார். தனது மகனை எப்போதாவது
ஒரு முறை போய் பார்த்து வருவார்.
மகன் படிப்பை முடித்து
பட்டம் பெற்ற பிறகு திருவண்ணாமலையில் ஒரு வேலை கிடைத்தது. தன்னுடன் வாழும்படி அவரது பெற்றோர்களை கோரினார். அப்போது சர்மாஜிக்கு தனது மகனின் மரணத்தின் சரியான தேதி மற்றும் நேரம்
தெரிந்து இருந்தது, அவரது மகன் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே வாழ்வார் என்று அறிந்திருந்தார். இருந்தாலும் அவரது கோரிக்கையை ஏற்று
அவருடைய வீட்டில் குடியேறினர். விரைவிலேயே அவர் ஒரு
கடுமையான காய்ச்சல் கண்டு விதித்த நேரத்தில் அவரது உடலை நீத்தார்.
பின்னால் ஒரு நாள் தனது மகனின் மரணம் பற்றி சர்மாஜி கூறினார்:
"என் மனைவி விசாலாட்சியால் இதை தாங்கிக்கொள்ள முடியாது என்று நினைத்தேன். அதனால் அவளிடம் மகன் சிறிய வயதிலேயே இறந்து போவான் என்ற உண்மையை மறைத்தேன்.. மாறாக, தன் மகனின் மரணத்தை அவள் எதிர்கொண்ட விதம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவள் என்னை விட தைரியமாகவே அதை எதிர்கொண்டாள்.
அவர்
ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை.
அதற்குப் பதிலாக அவள், ”அவன் மீண்டும் அருணாச்சலத்திடம் போய்விட்டான். கவலைப்படவேண்டாம் " என்று கூறி என்னை ஆறுதல் படுத்தினாள். ”அவன் இங்கே வந்து அருணாச்சலத்துடன் இணைய எவ்வளவு கொடுத்து வைத்திருக்க
வேண்டும்! அவனது உடலை இங்கே விட்டான்; மிகவும் அதிர்ஷ்டசாலி! என்றாள்.”
வயது இருபது
வருடங்கள் ஆகும் முன்னால் ஒரே மகன் இறந்த நிலையில் எந்த துன்பமும் இல்லை!! ரமண
மஹரிஷியின் குணப்படுத்தும் சக்தி இத்தகையது! பிற அறிவியல் துறைகள் எதிர்காலத்தை காட்டலாம்; ஆனால் பகவானின் அருள் வரக்கூடிய காலத்தை
சக்தி இல்லாதபடி செய்கிறது.
வெங்கடேஸ்வர
சர்மா பிரபலமாக அடி அண்ணாமலை சாஸ்த்ரிகள்
என அழைக்கப்பட்டார். மௌண்டன் பாத் பத்திரிகையில் அவரது இறப்பு இப்படி இரங்கல் பகுதியில் குறிப்பிடப்படுகிறது. "கடைசி நாட்களில், பக்தர்கள்
அவரை பெரும் ஆன்மீக முதிர்ச்சி பெற்ற ஒரு ஸ்திதப் ப்ரக்ஞனாக பார்த்தனர். இறுதியில் வரை முழுமையாக சுயநினைவுடன் இருந்தார். அவரது இறுதி
டிசம்பர் 13, 1987 அன்று மிகவும் அமைதியாக வந்தது.
அவர் கடைசி மூச்சின் போதும் 'அருணாச்சல சிவா அருணாச்சல சிவா,' என பக்தர்கள் கோஷமிட அதைக்கேட்டுக்கொண்டே உயிர் நீத்தார்! இந்த உண்மையான ரமண பக்தர் அப்போது அருணாச்சலத்துடன் ஐக்கியமாகி விட்டார்.
No comments:
Post a Comment