Pages

Friday, March 30, 2018

கிறுக்கல்கள் - 194





அறிவுக்குப்பொருந்தாத விருந்தாளியின் நம்பிக்கைகளை பற்றி மாஸ்டர் பேசியபோது அவர் பெருமிதமாக "அவை அறிவுக்கு அகப்படவில்லை என்பதால்தான் நம்புகிறேன்" என்றார்.

மாஸ்டர் மெதுவாக "அவற்றை நம்புவதால்தான் அறிவுக்கு அகப்படவில்லை என்று சொல்லணுமோ?” என்றார்.

Thursday, March 29, 2018

கிறுக்கல்கள் - 193





தன் நடை உடை பாவனைகளால் மக்களை கவர முயலும் 'ஆன்மீகவாதிகள்' குறித்து சீடர்களிடம் மாஸ்டர் இப்படி சொன்னார்:

ஒரு குடிகாரன் வழக்கம் போல் எக்கச்சக்கமாக குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டு இருந்தான். மனைவி திட்டுவாளே என்று பயம்! ஒரு யுக்தி தோன்றியது. வீட்டுக்குப்போய் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிப்பதாக பாவனை செய்வது. குடிகாரன் அப்படி செய்வானா?

வீட்டில் மனைவி கேட்டாள்: அந்த மூலையில என்ன செய்யறே?

பாத்தா தெரியலையா அன்பே? படிக்கிறேன்!

குடிகாரா! அந்த ப்ரீஃப் கேஸை மூடி வெச்சுட்டு கொட்டிக்க வா!

Wednesday, March 28, 2018

கிறுக்கல்கள் - 192





சிறு வயதிலேயே மாஸ்டர் வீட்டை விட்டு ஞானத்தை தேடி கிளம்பிவிட்டார். கிளம்பும் போது 'ஞானத்தை கண்டறிந்தால் தெரிவிக்கிறேன்' என்று சொன்னார்.
பல வருஷங்கள் கழித்து அப்படி தெரிவிப்பது முக்கியமில்லை என்று தோன்றியது!
அப்போதுதான் அவருக்கே தெரியாமல் அதை அடைந்து விட்டு இருந்தது புரிந்தது!

Tuesday, March 27, 2018

கிறுக்கல்கள் - 191





மாஸ்டர் வழக்கம் போல் ஒரு கதை சொன்னார்.

ஒரு வயதான பெண் பல் வைத்தியரிடம் தன் பொய் பல் செட்டை இன்னும் கொஞ்சம் தேய்த்து தருமாறு கேட்டார்.
இது மூணாவது தடவை கேக்கறீங்க! ஏன்?
இது சரியா ஃபிட் ஆகலை!
இன்னும் தேய்ச்சா உங்க வாயில ஃபிட் ஆகாதே!
அட வாயப்பத்தி யார் சொன்னா? அத வெக்கற க்ளாஸ் டம்ப்ளர்ல பிட் ஆகலை!

மாஸ்டர் முத்தாய்ப்பாக கேட்டார்: உன் நம்பிக்கைகள் உன் மனசுக்கு பொருத்தமா இருக்கலாம். ஆனா அதெல்லாம் உண்மைக்கு பொருந்துதா?

Monday, March 26, 2018

கிறுக்கல்கள் - 190





ஞானத்துக்கு பெரிய தடையா இருக்கறது எது?
அறியாமை!
ஒரு அறியாமைதான் இருக்கா? இல்லை நிறைய விதமா இருக்கா?
"நிறைய! உதாரணமா உன் அறியாமை ஞானத்தை நீ தேடணும்ன்னு சொல்லுது!" என்றார் மாஸ்டர்!

Friday, March 23, 2018

கிறுக்கல்கள் - 189





சீடர் ஒருவர் 'உலக மக்களின்' பேராசையையும் வன்முறையையும் சகட்டு மேனிக்கு திட்டிக்கொண்டு இருந்தார்.

மாஸ்டர் சொன்னார் "நீ ஒரு கதையை நினைவு படுத்துகிறாய். ஓநாய் ஒன்று அவ்வப்போது திடீரென்று சாதுவாகிவிடும். சாதுவாக இருக்கும்போது ஒரு முறை அது பூனை எலியை துரத்துவதைப்பார்த்து இன்னொரு ஓநாயிடம் சொன்னது: “யாராவது இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!”

Thursday, March 22, 2018

கிறுக்கல்கள் - 188





"நீங்க ஏன் சுற்றுப்பயணம் செய்வதே இல்லை? “என்று ஒருவர் மாஸ்டரை கேட்டார்.

"ஒவ்வொரு நாளும் ஒரே பொருளை அல்லது ஒரே நபரை பார்த்து அதிலோ, அவரிலோ ஏதேனும் புதிதாக இருப்பதை கண்டுபிடிப்பது சுற்றுப்பயணத்தை விட சுவாரசியமானது” என்றார் மாஸ்டர்.

Wednesday, March 21, 2018

கிறுக்கல்கள் - 187





இனப்பாகுபாட்டை எதிர்த்து நடந்த ஆட்சேபணை கூட்டத்தை கடுமையாக தண்டித்த கவர்னருக்கு மாஸ்டர் ஒரு ஆட்சேபணை கடிதம் அனுப்பினார்.

கவர்னர் அதற்கு பதில் அனுப்பினார் "நான் என் கடமையைத்தான் செய்கிறேன்!”

மாஸ்டர் அதை படித்துவிட்டு சொன்னார் " முட்டாள்கள் வெட்கப்பட வேண்டிய காரியத்தை செய்துவிடும் போது இப்படித்தான் அது தன் கடமை என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள்.”

Tuesday, March 20, 2018

கிறுக்கல்கள் - 186





மாஸ்டர் பிரசங்கியிடம் சொன்னார் : “ உங்களுடன் பிரச்சினை என்னன்னா நீங்க சொல்லறது எல்லாம் உண்மைதான்; அதே சமயம் வெத்துவேட்டு. உங்க மக்கள் கேட்கிறது நிதர்சனம்; நீங்க கொடுக்கறது வெற்று வார்த்தைகள்.”

பிரசங்கிக்கு புரியவில்லை. “புரியறாப்போல சொல்லுங்களேன்" என்றார்.

நீங்க தவணை முறையில் பொருள் வாங்கி சரியா பணம் கட்டாத என் நண்பர் மாதிரி இருக்கிங்க. அந்த கம்பனி முழு தொகையையும் கேட்டு கடிதம் அனுப்பித்து. இவர் உடனடியா ரொம்ப தெளிவா பதில் போட்டார்: “நான் உங்களுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் பாக்கி!”

Monday, March 19, 2018

கிறுக்கல்கள் - 185





இளம் சமூக ஆர்வலர் சமூக அமைப்பை புரட்டிபோட ஆயத்தமாக இருந்தார்.

"ரொம்ப நல்லது" என்றார் மாஸ்டர். "நமக்குத்தேவையானது மாற்றத்தை கொண்டுவரும் செயல் இல்லை; அன்பை கொண்டு வரும் பார்வை.”

அப்போ சமூக அமைப்பை மாற்றுவது எல்லாம் நேர விரயம்தான் என்கறீங்களா?”

இல்லை இல்லை! மாற்றிய அமைப்பு அன்பை பாதுகாத்து தக்க வைக்கும். அது அன்பை உருவாக்க முடியாது!”

Friday, March 16, 2018

கிறுக்கல்கள் - 184





புனிதத்தன்மை என்பது நான் அற்ற நிலை- தன்னிழப்பு என்பதை விளக்க மாஸ்டர் சொல்லும் கதை.  

நண்பர் ஒருவர் இனி குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார். சில நாட்களுக்கு மேல் 'தாகம்' பொறுக்கவில்லை. பார் இல் போய் லெமனேட் வேண்டும் என்று கேட்டார்.

அதை தயாரிக்கும் போது கிசு கிசுத்தார். “நான் பார்க்காத போது அதுல கொஞ்சம் விஸ்கி கலந்துடரையா?”

Thursday, March 15, 2018

கிறுக்கல்கள் - 183





சீடன் பிரசங்கியாக போகும் தன் முடிவை மாஸ்டரிடம் தெரிவித்தான். மாஸ்டர் சுருக்கமால பொறுத்திரு; நீ இன்னும் தயார் ஆகவில்லை' என்றார்.
ஒரு வருடம் ஆகியது; பின் இரண்டு; ஐந்து;பத்து… இன்னும் மாஸ்டர் அனுமதி தரவில்லை.
ஒரு நாள் சீடன் கேட்டான்: “ நான் ரெடி இல்லைன்னாலும் ஏதாவது நல்லது செய்ய முடியாதா?”
மாஸ்டர் சொன்னார்: துப்பாக்கில தோட்டாவை போடும் முன்னாடியே சுடற வேட்டைக்காரன் என்னத்தை சாதிப்பான்?”

Wednesday, March 14, 2018

அந்தணர் ஆசாரம் - 24 - தேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள்





12 நாழிகைக்கு மேல் மாத்யாஹ்ணிக ஸ்னானம் செய்ய வேண்டும். பின் மாத்யாஹ்ணிகம் செய்ய வேண்டும். இயன்ற அளவு காயத்ரி ஜபித்து பின் தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலரும் தேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் ப்ரஹ்ம யக்ஞத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை. இது மாத்யாஹ்ணிகத்துக்கு பின் மட்டுமே செய்யப்படுவது. ப்ரஹ்ம யக்ஞம் முன் சொன்னது போல் முதல் பாகத்தில் செய்யப்படுவது. அந்த காலத்தில் சொல்லவில்லையானால் இப்போதாவது சொல்ல வேண்டும்.
வ்யாஸர் சொல்லியபடி பிரணவத்துடன் தேவர்கள், ரிஷிகள், பித்ருக்களை நாமா சொல்லி தர்ப்பயாமி என்றூ தர்ப்பணம் செய்ய வேண்டும். தேவர்களையும் ப்ரஹ்ம ரிஷிகளையும் அக்‌ஷதையுடன் கூடிய ஜலத்தாலும் பித்ருக்களை எள் கலந்த ஜலத்தாலும் உத்தேசித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். தேவர்களுக்கு பூணூலை உபவீதமாக தரித்து ஒரு முறையும், நிவீதியாக ( மாலைபோல) தரித்து ரிஷிகளுக்கு இரு முறையும், இடமாக தரித்து பித்ருக்களுக்கு மும் முறையும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலரும் தாய் தந்தையர் உயிருடன் இருந்தால் இந்த பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டியதில்லை/ கூடாது என்று நினைக்கிறார்கள். அது தவறு. இங்கே உத்தேசித்து தர்ப்பணம் கொடுக்கப்படுவோர் வருடாந்திர ச்ராத்தத்தில் வரும் வஸு, ருத்ர, ஆதித்ய பித்ருக்கள் இல்லை. இவர்கள் ஸோமன், யமன், அக்னி என பித்ரு தேவதைகள். மந்திரங்களை கூர்ந்து கவனித்தால் இது புலப்படும். ஆகவே அனைவருமே பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதே போல பூணூலை பிடித்துக்கொண்டு தர்ப்பணம் செய்வது எப்படியோ வழக்கில் இருக்கிறது. இதற்கு ப்ரமாணமும் காணப்படவில்லை. நிவீதி பற்றி விளக்கும் இடத்தில்
मानुषेष्वंसयोः सक्तं मैथुने पृष्ठभागिकम्। तर्पणेऽङ्गुष्ठयोः सक्तं निवीतं त्रिविधं स्मृतम्॥
நிவீதம் மூன்று விதம். சாதாரண மநுஷ்ய கார்யங்களில் இரண்டு தோள்களிலும்
(
சமமாக/முன்புறம் தொங்கி) இருப்பது. ஸ்த்ரீ ஸங்கத்தில் பின் புறம்
தொங்குவது. (ருஷி) தர்ப்பணம் போது (நதியில்) இரண்டு கட்டைவிரல்களிலும்
மாட்டிக்கொண்டிருப்பது.
என்று சொல்லி இருப்பதால் ரிஷி தர்ப்பணத்துக்கு மட்டுமே ஆதாரம் காணப்படுகிறது.

Tuesday, March 13, 2018

காரடையான் நோன்பு - 2018





காரடையான் நோம்பு. இது வரைக்கும் இதெல்லாம் பொம்பிளைங்க சமாசாரம்ன்னு விட்டுட்டுத்தான் போயிருக்கேன். திடீர்ன்னு ஒரு நாள் காரடை கொடுப்பாங்க. ஓஹோ இன்னைக்கு நோம்பு போலிருக்குன்னு நினைச்சுப்பேன்! அவ்ளோதான்.

தம்பி இதப்பத்தி கேட்டப்ப எனக்கு தெரியாதுன்னு சொல்ல மனசில்ல. சரி வழக்கம் போல பையரை கேபையரை கேட்டாச்சு.

நல்ல டெக்னீஷியன் கஸ்டமர் கம்ப்ளைண்ட் கேட்டுட்டு முதல் வேலையா அந்த கம்ப்ளைண்ட் உண்மைதானா பார்க்கிற மாதிரி பஞ்சாங்கம் எடுத்துப்பாத்து உறுதிப்படுத்திண்டேன். ரைட்டுதான். நடு ராத்திரிதான் டைம் போட்டிருக்கு.

அடுத்து விரத பூஜா விதானத்துல என்ன டெபனிஷன் போட்டிருக்குன்னு பாத்தேன். பாத்ரபத சுக்ல பட்ச சதுர்த்தின்னு ஏதாவது போட்டிருப்பாங்க. பாத்தா பஞ்சாங்கத்தில் சொன்ன நாளில் செய்யவும்ன்னு போட்டிருக்கு. சுத்தம்!

தனக்கு 'தீர்க சுமங்கலித்துவம்' இருக்கவும் கணவனுடன் 'அன்யோன்ய ப்ரீதி' இருக்கவும் சங்கல்பம். இதோட இம்ப்ளிகேஷன் என்னன்னு அவரவர் முடிவு செய்து கொள்ளவும்!

இந்த நோம்பு பூஜைக்கான நேரம் பங்குனி மாசம் பிறக்கறதுக்கு ஜஸ்ட் முன்னால. அதாவது மாசி மாசம் இருக்கும் போதே. சரி எப்போ? நடு ராத்திரியா?

சாதாரணமா சூரியன் இல்லாத நேரங்கள் கர்மாக்களுக்கு உகந்த நேரம் இல்லை.

விதி விலக்கா ராத்திரி மட்டுமே வரும் நிகழ்வு - சந்த்ர க்ரஹணம் மாதிரி- ராத்திரிலதான் செய்ய வேண்டி இருக்கும் -- எக்செப்ஷனல் க்ளாஸ்.

ப்ரஹ்ம முஹூர்த்தத்தில வந்தா அலவ்ட். - எக்செப்ஷனல் சப் க்ளாஸ்.

ஆந்திரா மாதிரி சில இடங்களில இப்படி பார்க்கிறதில்லை. அங்கே ஒரு கால கட்டத்திலே முகலாய ஆட்சி பெரும்பாலான இடங்களில நடந்ததால பயந்து கல்யாணமே கூட ராத்திரி செய்யற பழக்கம் வந்துடுத்து. - எமர்ஜென்சி சப் க்ளாஸ்.

ரைட். இப்ப இந்த வருஷம் நடு ராத்திரி வரதே என்ன செய்யறது?

ஆராய்சில தோணின விடை: சாயங்காலமா சூரியன் இருக்கறப்பவே செஞ்சுடு. அப்ப சங்க்ரமணத்துக்கு - மாசப்பிறப்புக்கு கிட்டேயும் இருக்கும். ராத்திரி செய்யவும் இல்லை.

அடுத்த நாள் காலை சரி இல்லை. பங்குனி பிறந்துடும்.

அன்னைக்கு காலைதான் சௌகரியம்ன்னா அது அவரவர் சௌகரியம். சாயங்காலம் செஞ்சா அது மாசப்பிறப்புக்கு கிட்டேயா இருக்கும். காலைலன்னா கொஞ்சம் விலகி இருக்காப்போல இருக்கு.

எந்த கர்மாவுக்கும் சாப்பிடாம இருக்கறது ஒரு அங்கம். ஏன் என்கிறதை ரெண்டு விதமா பார்க்கலாம். உணவே நம் எண்ணங்களை நிர்ணயிக்கிறது என்கிறதால கண்ட எண்ணங்கள் தோணாம இருக்க சாப்பிடாம இருக்கறது. இரண்டாவதா நம்மை நாமே வருத்திக்கொள்ளறது ஒரு வித ப்ராயச்சித்தம் போல.

இருந்தாலும் இதுக்கெல்லாம் வயசானவங்க, கர்ப்பிணி, வ்யாதி இருக்கறவங்கன்னு எக்செப்ஷன்ஸ் கொடுத்து இருக்காங்க.

எது உசிதம்ன்னு பாத்து செய்யவும்!


பூஜை செய்ய அஷ்டோத்திரம் கீழே:

 
॥ ஶ்ரீகாமாக்ஷ்யஷ்டோத்தரஶதநாமாவளீ ॥

அத² ஶ்ரீ காமாக்ஷ்யஷ்டோத்தரஶதநாமாவளி: ॥

ௐ ஶ்ரீ காலகண்ட்²யை நம: ।
ௐ ஶ்ரீ த்ரிபுராயை நம: ।
ௐ ஶ்ரீ பா³லாயை நம: ।
ௐ ஶ்ரீ மாயாயை நம: ।
ௐ ஶ்ரீ த்ரிபுரஸுந்த³ர்யை நம: ।
ௐ ஶ்ரீ ஸுந்த³ர்யை நம: ।
ௐ ஶ்ரீ ஸௌபா⁴க்³யவத்யை நம: ।
ௐ ஶ்ரீ க்லீங்கார்யை நம: ।
ௐ ஶ்ரீ ஸர்வமங்க³ளாயை நம: ।
ௐ ஶ்ரீ ஐங்கார்யை நம: । 10
ௐ ஶ்ரீ ஸ்கந்த³ஜநந்யை நம: ।
ௐ ஶ்ரீ பராயை நம: ।
ௐ ஶ்ரீ பஞ்சத³ஶாக்ஷர்யை நம: ।
ௐ ஶ்ரீ த்ரைலோக்யமோஹநா தீ⁴ஶாயை நம: ।
ௐ ஶ்ரீ ஸர்வாஶாபூர வல்லபா⁴யை நம: ।
ௐ ஶ்ரீ ஸர்வ ஸங்க்ஷோப⁴ணாதீ⁴ஶாயை நம: ।
ௐ ஶ்ரீ ஸர்வ ஸௌபா⁴க்³யவல்லபா⁴யை நம: ।
ௐ ஶ்ரீ ஸர்வார்த² ஸாத⁴காதீ⁴ஶாயை நம: ।
ௐ ஶ்ரீ ஸர்வ ரக்ஷாகராதி⁴பாயை நம: ।
ௐ ஶ்ரீ ஸர்வ ரோக³ஹராதீ⁴ஶாயை நம: । 20
ௐ ஶ்ரீ ஸர்வ ஸித்³தி⁴ப்ரதா³தி⁴பாயை நம: ।
ௐ ஶ்ரீ ஸர்வாநந்த³மயாதீ⁴ஶாயை நம: ।
ௐ ஶ்ரீ யோகி³நீ சக்ரநாயிகாயை நம: ।
ௐ ஶ்ரீ ப⁴க்தாநுரக்தாயை நம: ।
ௐ ஶ்ரீ ரக்தாங்க்³யை நம: ।
ௐ ஶ்ரீ ஶங்கரார்த⁴ஶரீரிண்யை நம: ।
ௐ ஶ்ரீ புஷ்ப பா³ணேக்ஷு கோத³ண்ட³ பாஶாங்குஶ கராயை நம: ।
ௐ ஶ்ரீ உஜ்வலாயை நம: ।
ௐ ஶ்ரீ ஸச்சிதா³நந்த³ லஹர்யை நம: ।
ௐ ஶ்ரீ ஶ்ரீ வித்³யாயை நம: । 30
ௐ ஶ்ரீ பரமேஶ்வர்யை நம: ।
ௐ ஶ்ரீ அநங்க³ குஸுமோத்³யாநாயை நம: ।
ௐ ஶ்ரீ சக்ரேஶ்வர்யை நம: ।
ௐ ஶ்ரீ பு⁴வநேஶ்வர்யை நம: ।
ௐ ஶ்ரீ கு³ப்தாயை நம: ।
ௐ ஶ்ரீ கு³ப்த தராயை நம: ।
ௐ ஶ்ரீ நித்யாயை நம: ।
ௐ ஶ்ரீ நித்ய க்லிந்நாயை நம: ।
ௐ ஶ்ரீ மத³த்³ரவாயை நம: ।
ௐ ஶ்ரீ மோஹிண்யை நம: । 40
ௐ ஶ்ரீ பரமாநந்தா³யை நம: ।
ௐ ஶ்ரீ காமேஶ்யை நம: ।
ௐ ஶ்ரீ தருணீ கலாயை நம: ।
ௐ ஶ்ரீ ஶ்ரீகலாவத்யை நம: ।
ௐ ஶ்ரீ ப⁴க³வத்யை நம: ।
ௐ ஶ்ரீ பத்³மராக³கிரீடாயை நம: ।
ௐ ஶ்ரீ ரக்த வஸ்த்ராயை நம: ।
ௐ ஶ்ரீ ரக்த பூ⁴ஷாயை நம: ।
ௐ ஶ்ரீ ரக்த க³ந்தா⁴நு லேபநாயை  நம: ।
ௐ ஶ்ரீ ஸௌக³ந்தி⁴ கலஸ த்³வேண்யை நம: । 50
ௐ ஶ்ரீ மந்த்ரிண்யை நம: ।
ௐ ஶ்ரீ தந்த்ர ரூபிண்யை நம: ।
ௐ ஶ்ரீ தத்வமய்யை நம: ।
ௐ ஶ்ரீ ஸித்³தா⁴ந்தபுர வாஸிந்யை நம: ।
ௐ ஶ்ரீ ஶ்ரீமத்யை நம: ।
ௐ ஶ்ரீ சிந்மய்யை நம: ।
ௐ ஶ்ரீ தே³வ்யை நம: ।
ௐ ஶ்ரீ கௌலிந்யை நம: ।
ௐ ஶ்ரீ பரதே³வதாயை நம: ।
ௐ ஶ்ரீ கைவல்ய ரேகா²யை நம: । 60
ௐ ஶ்ரீ வஶிந்யை நம: ।
ௐ ஶ்ரீ ஸர்வேஶ்வர்யை நம: ।
ௐ ஶ்ரீ ஸர்வ மாத்ருʼகாயை நம: ।
ௐ ஶ்ரீ விஷ்ணுஸ்வஸ்ரே நம: ।
ௐ ஶ்ரீ வேத³மய்யை நம: ।
ௐ ஶ்ரீ ஸர்வ ஸம்பத் ப்ரதா³யிந்யை நம: ।
ௐ ஶ்ரீ கிங்கரீ பூ⁴த கீ³ர்வாண்யை நம: ।
ௐ ஶ்ரீ ஸுதவாபி விநோதி³ந்யை நம: ।
ௐ ஶ்ரீ மணிபூர ஸமாஸீநாயை நம: ।
ௐ ஶ்ரீ அநாஹதாப்³ஜ வாஸிந்யை நம: । 70
ௐ ஶ்ரீ விஶுத்³தி⁴ சக்ர நிலயாயை நம: ।
ௐ ஶ்ரீ ஆஜ்ஞா பத்³ம நிவாஸிந்யை நம: ।
ௐ ஶ்ரீ அஷ்ட த்ரிம்ஶத் கலாமூர்த்யை நம: ।
ௐ ஶ்ரீ ஸுஷும்நாத்³வார மத்⁴யகாயை நம: ।
ௐ ஶ்ரீ யோகீ³ஶ்வர மநோத்⁴யேயாயை நம: ।
ௐ ஶ்ரீ பரப்³ரஹ்ம ஸ்வரூபிண்யை நம: ।
ௐ ஶ்ரீ சதுர்பு⁴ஜாயை நம: ।
ௐ ஶ்ரீ சந்த்³ரசூடா³யை நம: ।
ௐ ஶ்ரீ புராணாக³ம ரூபிண்யை நம: ।
ௐ ஶ்ரீ ஓங்கார்யை நம: । 80
ௐ ஶ்ரீ விமலாயை நம: ।
ௐ ஶ்ரீ வித்³யாயை நம: ।
ௐ ஶ்ரீ பஞ்சப்ரணவ ரூபிண்யை நம: ।
ௐ ஶ்ரீ பூ⁴தேஶ்வர்யை நம: ।
ௐ ஶ்ரீ பூ⁴தமய்யை நம: ।
ௐ ஶ்ரீ பஞ்சாஶத் பீட²ரூபிண்யை நம: ।
ௐ ஶ்ரீ ஷோடா³ந்யாஸ மஹாரூபிண்யை நம: ।
ௐ ஶ்ரீ காமாக்ஷ்யை நம: ।
ௐ ஶ்ரீ த³ஶ மாத்ருʼகாயை நம: ।
ௐ ஶ்ரீ ஆதா⁴ர ஶக்த்யை நம: । 90
ௐ ஶ்ரீ அருணாயை நம: ।
ௐ ஶ்ரீ லக்ஷ்ம்யை நம: ।
ௐ ஶ்ரீ த்ரிபுரபை⁴ரவ்யை நம: ।
ௐ ஶ்ரீ ரஹ:பூஜா ஸமாலோலாயை நம: ।
ௐ ஶ்ரீ ரஹோயந்த்ர ஸ்வரூபிண்யை நம: ।
ௐ ஶ்ரீ த்ரிகோண மத்⁴ய நிலயாயை நம: ।
ௐ ஶ்ரீ பி³ந்து³ மண்ட³ல வாஸிந்யை நம: ।
ௐ ஶ்ரீ வஸுகோண புராவாஸாயை நம: ।
ௐ ஶ்ரீ த³ஶாரத்³வய வாஸிந்யை நம: ।
ௐ ஶ்ரீ சதுர்த³ஶார சக்ரஸ்தா²யை நம: । 100
ௐ ஶ்ரீ வஸு பத்³ம நிவாஸிந்யை நம: ।
ௐ ஶ்ரீ ஸ்வராப்³ஜ பத்ர நிலயாயை நம: ।
ௐ ஶ்ரீ வ்ருʼத்தத்ரய வாஸிந்யை நம: ।
ௐ ஶ்ரீ சதுரஸ்ர ஸ்வரூபாஸ்யாயை நம: ।
ௐ ஶ்ரீ நவசக்ர ஸ்வரூபிண்யை நம: ।
ௐ ஶ்ரீ மஹாநித்யாயை நம: ।
ௐ ஶ்ரீ விஜயாயை நம: ।
ௐ ஶ்ரீ ஶ்ரீராஜராஜேஶ்வர்யை நம: ॥ 108

இதி ஶ்ரீ காமாக்ஷ்யஷ்டோத்தரஶத நாமாவளி: ஸமாப்தா ॥

அந்தணர் ஆசாரம் - 23 - பகல் 2 ஆம் பாகம்





ப்ரஹ்ம யக்ஞத்துடன் பகலின் முதல் பாகத்தில், அதாவது சூர்யோதயத்துக்கு பின் வரும் முதல் மூணே முக்கால் நாழிகைகளில், அனுஷ்டிக்க வேண்டிய தர்மங்கள் முடிந்தன. இனி இரண்டாம் பாகம்.வேத சாத்திரங்களை சிந்தனம் செய்ய வேண்டும். சிஷ்யர்களுக்கு பாடங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். பூஜைக்கான புஷ்பங்கள், ஹோமங்களுக்கான ஸமித், தர்ப்பைகளை க்ரஹிக்கலாம். துளசியை க்ரஹிக்க தனி மந்திரங்கள் இருக்கிறன. அவற்றை சொல்லிக்கொண்டு க்ரஹிக்க வேண்டும். செவ்வாய், வெள்ளி மன்வாதிகள், (மாதப்பிறப்பு) யுகாதிகள், மத்யாஹ்னத்துக்குப்பிறகு, ஆகிய வேளைகளில் துளசி க்ரஹிக்கக்கூடாது. அதே போல ஸங்க்ரமணம், அமாவாசை, பௌர்ணமி, த்வாதசீ, இரவு சந்த்யா காலம் ஆகிய காலங்களும் விலக்கத்தக்கவை. மீறி க்ரஹித்தால் விஷ்ணுவின் சிரசை ஹிம்சித்த தோஷம் உண்டு என்கிறது சாஸ்த்திரம்.
காலை ஏழரை நாழிகைக்கு மேல் பதினொன்றரை நாழிகைக்குள் செய்ய வேண்டியன சொல்லப்படுகிறது.
க்ருஹஸ்தனால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் தாய், தந்தை, குரு, பத்னீ, குழந்தைகள், தாசன், அண்டிப்பிழைப்பவன், அப்யாகதன், அதிதி, அக்னி என்கிறார் ஹாரீதர். மேலும் ஞாதி (பங்காளி), பந்து, பணமில்லாதவன், பந்துக்களால் கைவிடப்பட்டவன், தரித்திரன் இவர்களும் கூட ரக்‌ஷிக்கத்தகுந்தவர்கள் என்கிறார். இவர்களை போஷித்து காப்பாற்ற தர்மமான வழியில் பணம் சம்பாதிக்க இந்த நேரத்தை செலவிட வேண்டும். தார்மீகமான ராஜாக்களை அண்டும்படி ஹாரீதர் சொல்கிறார். ஆனால் இந்த கால கட்டத்தில் ராஜாக்களே இல்லாமல் போய்விட்டதால் மற்ற தர்ம வழிகளில் திரவியம் சம்பாதிக்கலாம். இப்படி சம்பாதித்து தன்னால் ரக்‌ஷிக்கத்தகுந்தவர்களை ரக்‌ஷிப்பது புண்ணியம்; நல்ல லோகங்களை அடையலாம் என்கிறார் ஹாரீதர். சம்பாதித்து தன் வயிறை மட்டுமே வளர்க்கிறவன் செத்தவன் போலவாம்.

Monday, March 12, 2018

கிறுக்கல்கள் - 183





ஒரு சீடன் எப்போதும் உண்மையையே பேசும் பழக்கத்தை கொண்டிருந்தான். அதனால் அடிக்கடி பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டான்.

மாஸ்டர் அவனைக்கூப்பிட்டு கண்டித்தார்.

ஏன் மாஸ்டர்? நாம எப்பவும் உண்மையைத்தானே பேசணும்?”
அப்படி இல்லை. சில சமயம் உண்மையை வெளியிடாமல் இருக்கறதே நல்லது!”
அதெப்படி மாஸ்டர்?”
பதிலுக்கு ஒரு வாரம் என்று சொல்லி வந்து ஒரு மாதம் தங்கின மாமியார் கதையை சொன்னார்.

அந்த இளம் தம்பதிகளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கடைசியில் ஒரு திட்டம் போட்டார்கள். 'இன்னைக்கு நான் சூப் ரெடி பண்ணி பறிமாறுவேன். நீ அதுல உப்பு அதிகம்ன்னு என்னை திட்டணும். நான் குறைச்சலா இருக்குன்னு சொல்லுவேன். ரெண்டு பேரும் சண்டை போடுவோம். என் அம்மா உன்னோட ஒத்துப்போனா நான் பயங்கர கோபம் வந்து அவளோட சணடை போட்டு நீ இப்பவே ஊருக்கு கிளம்புன்னு சொல்லறேன். அம்மா என்னோட ஒத்துப்போனா நீ சண்டை போட்டு அவளை துரத்து. சரியா?'

சூப் பறிமாறப்பட்டது. சண்டையும் ஆரம்பிச்சு உச்சத்தை அடைஞ்சது. அந்த பெண் கேட்டா "அம்மா சூப்புல உப்பு அதிகமா குறைச்சலா?”

கிழவி டேஸ்ட் பண்ணிட்டு சொன்னா "எனக்கு சரியா இருக்கு!”

Friday, March 9, 2018

கிறுக்கல்கள் - 182





மிடில என்று அலுத்துக்கொண்டு மடாலயத்தை விட்டு கிளம்பினார் ஒரு விருந்தாளி!

பக்கத்தில் இருந்த சீடர் அனுதாபத்துடன் தட்டிக்கொடுத்தார். "உங்க பிரச்சினை எனக்குப்புரியுது. இங்க வந்த பின் மாசக்கணக்கா இந்த ஆசாமியை தவிர்த்துகிட்டு இருந்தேன். ஏன்னா இவரோட வார்த்தைகள் என் சின்ன அழகான பூந்தோட்டத்தில காட்டு மிருகங்களை அவுத்து விட்டா மாதிரி இருக்கும். அத விட சர்ச் பிரசங்கிகள்கிட்ட போயிடலாம்ன்னு தோணும். அவங்களோட வார்தைகள் ஒரு சுடுகாட்டிலேந்து இன்னொரு சுடுகாட்டுக்கு எலும்புகளை அனுப்பறா மாதிரி இருந்திருக்கும்."

Thursday, March 8, 2018

கிறுக்கல்கள் - 181





முக்கால்வாசி மனிதர்கள் விழிப்புணர்வின், செயலின் ஆனந்தத்தை விரும்புவதில்லை;மாறாக அன்பின், ஆதரவின் அரவணைப்பைத்தான் விரும்புகிறார்கள். இதை விளக்க தன் கடைசி மகளின் செய்கை குறித்து கதை சொன்னார்.

அவள் தினசரி இரவு தூங்கும் முன் கதைப்புத்தகத்தை கொண்டு வந்து கதை சொல்லும்படி சொல்லுவாள். மாஸ்டருக்கு ஒரு யோசனை வந்தது. ஒரு டேப் ரெகார்டரில் கதைகளை பதிவு செய்து அதை இயக்க அவளுக்கு கற்றுக்கொடுத்தார். நாலைந்து நாட்கள் சென்றன. அவள் திருப்பியும் புத்தகத்தை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள்.

"செல்லக்கண்ணு, உனக்குத்தான் இப்ப ரிகார்டர்ல கதை கேக்கத்தெரியுமே?”

"ஆமா. ஆனா அது மேல உக்காந்துக்க முடியாதே?”