முக்கால்வாசி
மனிதர்கள் விழிப்புணர்வின்,
செயலின்
ஆனந்தத்தை விரும்புவதில்லை;மாறாக
அன்பின், ஆதரவின்
அரவணைப்பைத்தான் விரும்புகிறார்கள்.
இதை விளக்க
தன் கடைசி மகளின் செய்கை
குறித்து கதை சொன்னார்.
அவள்
தினசரி இரவு தூங்கும் முன்
கதைப்புத்தகத்தை கொண்டு
வந்து கதை சொல்லும்படி
சொல்லுவாள்.
மாஸ்டருக்கு
ஒரு யோசனை வந்தது.
ஒரு டேப்
ரெகார்டரில் கதைகளை பதிவு
செய்து அதை இயக்க அவளுக்கு
கற்றுக்கொடுத்தார்.
நாலைந்து
நாட்கள் சென்றன.
அவள்
திருப்பியும் புத்தகத்தை
தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள்.
"செல்லக்கண்ணு,
உனக்குத்தான்
இப்ப ரிகார்டர்ல கதை
கேக்கத்தெரியுமே?”
"ஆமா.
ஆனா அது
மேல உக்காந்துக்க முடியாதே?”
No comments:
Post a Comment