சீடர்
ஒருவர் 'உலக
மக்களின்'
பேராசையையும்
வன்முறையையும் சகட்டு மேனிக்கு
திட்டிக்கொண்டு இருந்தார்.
மாஸ்டர்
சொன்னார் "நீ
ஒரு கதையை நினைவு படுத்துகிறாய்.
ஓநாய்
ஒன்று அவ்வப்போது திடீரென்று
சாதுவாகிவிடும்.
சாதுவாக
இருக்கும்போது ஒரு முறை அது
பூனை எலியை துரத்துவதைப்பார்த்து
இன்னொரு ஓநாயிடம் சொன்னது:
“யாராவது
இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி
வைக்க வேண்டும்!”
No comments:
Post a Comment