ஒரு
சீடன் எப்போதும் உண்மையையே
பேசும் பழக்கத்தை கொண்டிருந்தான்.
அதனால்
அடிக்கடி பிரச்சினைகளில்
மாட்டிக்கொண்டான்.
மாஸ்டர்
அவனைக்கூப்பிட்டு கண்டித்தார்.
“ஏன்
மாஸ்டர்? நாம
எப்பவும் உண்மையைத்தானே
பேசணும்?”
“அப்படி
இல்லை. சில
சமயம் உண்மையை வெளியிடாமல்
இருக்கறதே நல்லது!”
“அதெப்படி
மாஸ்டர்?”
பதிலுக்கு
ஒரு வாரம் என்று சொல்லி வந்து
ஒரு மாதம் தங்கின மாமியார்
கதையை சொன்னார்.
அந்த
இளம் தம்பதிகளுக்கு என்ன
செய்வது என்று தெரியவில்லை.
கடைசியில்
ஒரு திட்டம் போட்டார்கள்.
'இன்னைக்கு
நான் சூப் ரெடி பண்ணி பறிமாறுவேன்.
நீ
அதுல உப்பு அதிகம்ன்னு என்னை
திட்டணும்.
நான்
குறைச்சலா இருக்குன்னு
சொல்லுவேன்.
ரெண்டு
பேரும் சண்டை போடுவோம்.
என்
அம்மா உன்னோட ஒத்துப்போனா
நான் பயங்கர கோபம் வந்து அவளோட
சணடை போட்டு நீ இப்பவே ஊருக்கு
கிளம்புன்னு சொல்லறேன்.
அம்மா
என்னோட ஒத்துப்போனா நீ சண்டை
போட்டு அவளை துரத்து.
சரியா?'
சூப்
பறிமாறப்பட்டது.
சண்டையும்
ஆரம்பிச்சு உச்சத்தை அடைஞ்சது.
அந்த பெண்
கேட்டா "அம்மா
சூப்புல உப்பு அதிகமா குறைச்சலா?”
கிழவி
டேஸ்ட் பண்ணிட்டு சொன்னா
"எனக்கு
சரியா இருக்கு!”
No comments:
Post a Comment