மாஸ்டர்
பிரசங்கியிடம் சொன்னார் :
“ உங்களுடன்
பிரச்சினை என்னன்னா நீங்க
சொல்லறது எல்லாம் உண்மைதான்;
அதே சமயம்
வெத்துவேட்டு.
உங்க
மக்கள் கேட்கிறது நிதர்சனம்;
நீங்க
கொடுக்கறது வெற்று வார்த்தைகள்.”
பிரசங்கிக்கு
புரியவில்லை.
“புரியறாப்போல
சொல்லுங்களேன்"
என்றார்.
நீங்க
தவணை முறையில் பொருள் வாங்கி
சரியா பணம் கட்டாத என் நண்பர்
மாதிரி இருக்கிங்க.
அந்த
கம்பனி முழு தொகையையும் கேட்டு
கடிதம் அனுப்பித்து.
இவர்
உடனடியா ரொம்ப தெளிவா பதில்
போட்டார்:
“நான்
உங்களுக்கு ஆயிரத்து ஐநூறு
ரூபாய் பாக்கி!”
No comments:
Post a Comment