ஒரு
கிறிஸ்துவர் ஃஜென் மாஸ்டரிடம்
போனார். “மலைப்பிரசங்கத்தை
உங்களுக்கு படிச்சு காட்ட
அனுமதியுங்க"
“ஆஹா
சந்தோஷமா கேக்கறேனே!”
கிறிஸ்துவர்
கொஞ்சம் படித்துவிட்டு
நிமிர்ந்து பார்த்தார்.
மாஸ்டர்
புன்னகைத்து "அதை
சொன்னவர் ஒரு ஞானியாகத்தான்
இருக்கணும்" என்றார்.
கிறிஸ்துவர்
மனமகிழ்ந்து போனார்.
இன்னும்
கொஞ்சம் படித்தார்.
மாஸ்டர்
இடைமறித்து "இது
உலகை ரக்ஷிக்க வந்தவர்
வாயிலிருந்து வந்த வார்த்தைகள்"
என்றார்.
கிறிஸ்துவருக்கு
இன்னும் குஷியாகி விட்டது.
மேலும்
படித்தார். மாஸ்டர்
சொன்னார் "இந்த
பிரசங்கம் இறைத்தன்மை
நிறைந்தவரிடம் இருந்து
வந்திருக்க வேண்டும்"
கிறிஸ்துவர்
எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்து
விடை பெற்றார். அட
அவரை மதம் மாற்ற அல்லவா வந்தோம்?
பரவாயில்லை.
இன்னொரு
நாள் பார்த்துக்கொள்ளலாம்.
திரும்பும்
வழியில் ஏசு சாலையின் ஓரத்தில்
நின்று கொண்டு இருந்தார்.
“தேவகுமாரா,
நீங்கள்
கடவுள் தன்மை வாய்ந்தவர்
என்று அந்த ஆளை சொல்ல
வைத்துவிட்டேன்"
என்றார்
பரபரப்புடன்.
ஏசு
புன்னகைத்தார். "சரி,
அது உன்
கிறிஸ்துவ அஹங்காரத்தை தூண்டி
விட்டதைத் தவிர வேறு ஏதும்
நல்லது செய்ததா என்ன?”
என்று கேட்டார்.
No comments:
Post a Comment