இரண்டு
புத்த சாதுக்கள் மடாலயத்துக்கு
திரும்பும் வழியில் நதிக்கரையில்
ஒரு அழகிய பெண்மணியை கண்டார்கள்.
அவளும் நதியை
கடந்து செல்ல விரும்பினாள்.
ஆனால் நதியில்
ஆழம் அதிகமாக இருந்ததால்
அவளுக்கு பயமாக இருந்தது.
ஒரு சாது
அவளை தன் தோளில் சுமந்து
அக்கரை சேர்த்தார்.
அவளும் நன்றி
சொல்லிவிட்டு தன் வழியே
போய்விட்டாள்.
அந்த
இன்னொரு சாதுவுக்கு இது
சுத்தமாக பிடிக்கவில்லை.
"பெண்ணை
நீ எப்படி தொடலாம்?
அதுவும்
தூக்கி கொண்டுபோய் விடலாம்?
நமக்கு
விதித்த கட்டுப்பாடுகளுக்கு
இது விரோதமில்லையா? நீ
சாது என்பதை மறந்துவிட்டாயா?
மக்கள் என்ன
நினைப்பார்கள்?" என்று
ஆரம்பித்து இரண்டு மணி நேரம்
தொடர்ந்து திட்டிக்கொண்டே
இருந்தார்.
இவர்
மௌனமாக எல்லாவற்றையும்
கேட்டுக்கொண்டார். ஒரு
வழியாக திட்டு முடிந்ததும்
மென்மையாக சொன்னார் "நண்பா!
நான் அவளை
நதிக்கரையிலேயே விட்டுவிட்டேன்.
நீ ஏன் இன்னும்
சுமந்து கொண்டு இருக்கிறாய்!”
No comments:
Post a Comment