ஏசு
ஆரம்ப காலங்களில் நீதிக்கதைகள்
சொல்வதுண்டு. 'இறைவனின்
சாம்ராஜ்யம் அவர் அண்ணன்
தம்பி இருவரை கூப்பிட்டு
எல்லாவற்றையும் செலவழித்து
மனிதர்களுக்கு உதவி செய்யுமாறு
பணித்தத்தைப்போல இருக்கிறது'
என்றார்.
மூத்தவன்
அதை கேட்டதும் அதை முழுக்க
பின்பற்ற தீர்மானித்தான்.
ஆனால் தன்
குடும்பம் காதலி எல்லாரையும்
வலுக்கட்டாயத்துடன் பிரிய
வேண்டி இருந்தது. தூர
தேசத்துக்குப்போய் ஏழைகளுக்கு
உதவி செய்வதிலேயே காலம்
கழித்தான். அதற்கு
அவன் சிறைவாசம் கூட அனுபவிக்க
வேண்டி இருந்தது. பின்
அவனை தூக்கிலும் இட்டு
கொன்றார்கள்.
கடவுள்
சொன்னார். “என்
விசுவாசம் மிக்க பிரிய சேவகனே!
நீ எனக்கு
ஆயிரம் பங்கு சேவையை கொடுத்தாய்.
நான் உனக்கு
ஆயிரம் கோடி பங்கு பேரின்பத்தை
அளிக்கிறேன். சொர்கத்துக்கு
செல்வாயாக!”
சிறியவன்
கடவுள் பேச்சை கேட்கவில்லை.
தனக்கு
பிடித்த பெண்ணை மணந்து கொண்டு
வியாபாரம் செய்து செல்வம்
பெருக்கி நன்கு வாழ்ந்தான்.
மனைவியிடமும்
குழந்தைகள் இடமும் அன்பாக
இருந்தான். அவ்வப்போது
ஏழைகளுக்கும் கொஞ்சம்
கொடுத்தான்.
அவன்
இறந்த பின் கடவுள் சொன்னார்.
“என் விசுவாசம்
மிக்க பிரிய சேவகனே! நீ
எனக்கு இருபது பங்கு சேவையை
கொடுத்தாய். நான்
உனக்கு ஆயிரம் கோடி பங்கு
பேரின்பத்தை அளிக்கிறேன்.
சொர்கத்துக்கு
செல்வாயாக!”
மூத்தவனுக்கு
தன் தம்பிக்கும் தனக்கு
கிடைத்ததே கிடைத்தது என்று
தெரிய வந்தபோது ஆச்சரியமாக
இருந்தது. சந்தோஷப்பட்டான்.
கடவுளிடம்
சொன்னான் : “ இறைவா!
இது எனக்கு
நீ என்னை அழைத்து பணியை சொன்ன
போது தெரிந்து இருந்தாலும்
உன் மீதுள்ள அன்பினால் நான்
செய்ததையே நிச்சயம் செய்திருப்பேன!”
என்றான்.
No comments:
Post a Comment