Pages

Thursday, May 15, 2014

உணர்வு சார் நுண்ணறிவு - 1



ஆச்சு. ப்ளஸ் டூ ரிசல்ட் எல்லாம் வந்து எல்லா பத்திரிகையும் பக்கம் பக்கமா டுடோரியல் காலேஜ் விளம்பரம், ஸ்கூல்/ காலேஜ் விளம்பரம் ந்னு காசு பாத்தாச்சு. அப்புறம் ஸ்கூல் பர்ஸ்ட், மாவட்ட பர்ஸ்ட், தமிழக பர்ஸ்ட் அவங்க தெரு பர்ஸ்ட் ந்னு பல விதமா ஆளை தேடி தேடி கண்டு பிடிச்சு, முடிஞ்சா அவங்களோட சோகக் கதையும், இல்லாட்டா மருத்துவம் படிச்சு மக்களுக்கு சேவை செய்யப்போறேன் ந்னு ஃபீலிங்க்ஸையும் பத்தி பத்தியா போட்டாச்சு. பல வருஷங்களுக்கு முன்னேயே ஒரு சந்தேகம். இவங்க எல்லாம் என்ன ஆனாங்க? பத்தாவது ரிசல்ட் ல முதலிடம் வந்தவங்கள்ல எவ்வளோ பேர் ப்ளஸ் டூ ல ராங்க் வராங்க? இல்லைன்னா ஏன்? +2 ல வந்தவங்க வாழ்க்கையில் என்ன ஆனாங்க? சமீபத்துல நம்ம நண்பர் கூகுள் ப்ளஸ் ல இந்த கேள்வியை எழுப்பி இருந்தார்.
அமேரிக்காவில இதே போல சிலருக்கு சந்தேகம் வந்ததாம். ரைட் ந்னு ஆராய்ச்சில இறங்கிட்டாங்க. அங்கே பிரபலமான தேர்வு ஸாட் (SAT) டெஸ்ட். Scholastic Aptitude Test,  ந்னு முதல்ல சொல்லி அப்புறம்  Scholastic Assessment Test ந்னு பேரை மாத்திட்டங்க. இது காலேஜ் அட்மிஷனுக்கான டெஸ்ட்.  ஒத்தரோட புத்திசாலித்தனத்தை  அளக்கிற பரிட்சை. அதுல எக்கச்சக்க மார்க் வாங்கறவங்க எல்லாம் பின்னால் வாழ்க்கையில என்ன ஆறாங்க? எக்கச்சக்க மார்க் காலேஜிலேயும் வாங்கி நல்ல வேலை, சம்பளம், குடும்ப, அமைதியான வாழ்க்கை … இப்படித்தானே இருந்து இருக்கணும்?
அப்படி இல்லை என்கிறதுதான் ஆராய்ச்சியில கிடைச்ச விடை! மொத்தத்துல சிலருகே அப்படி வாழ்க்கை அமைஞ்சது. மத்தவங்க ஒவ்வொருவரும் ஒரு விதமா… சாதாரண மார்க் வாங்கறது, போதை பழக்கம், சிதைஞ்ச குடும்பம், நல்ல மார்க் வாங்கியும் வேலையில் நீடிக்க முடியாமை ந்னு பிரச்சினைகள் லிஸ்ட் மிகவும் நீளம்!

ஏன்? ஏன்? ஏன்? 

அப்ப ஒரு விஷயம் நிச்சயம்! படிப்பு/ புத்திசாலித்தனத்துக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதுக்கும் சம்பந்தம் இல்லை!  சம்பந்தமே இல்லைன்னு இல்லை. அதுவும் ஒரு காரணி. அவ்ளோதான். நல்ல படிப்பு, நல்ல வேலை நிறைவான வாழ்க்கை இருக்க முடியவே முடியும். ஆனா புத்திசாலித்தனம் ஆட்டோமேடிக்கா நல்ல மார்க் கொண்டு வராது; நல்ல மார்க் ஆட்டோமேடிக்கா நல்ல வேலையை கொடுக்காது, கொடுத்தாலும் அதில் நீடிப்பது காரண்டி இல்லை; நல்ல வேலை சம்பளம் ஆட்டோமேடிக்கா நல்ல வாழ்க்கையை கொடுப்பதும் காரண்டி இல்லை.

என்னய்யா குழப்புறீர்? அப்ப என்னதான் வேணும்?

மனது வசப்பட வேண்டும்!

இதுக்கு உணர்வு சார் நுண்ணறிவு தேவை என்கிறார்கள். ஆங்கிலத்துல emotional intelligence.
எல்லாம் சரி. இதை ஏன் இங்கே ஆன்மீகம் பார் டம்மீஸ் ல எழுதணும்? 

வளரும்…


 

No comments: