Pages

Thursday, May 22, 2014

உணர்வு சார் நுண்ணறிவு - 4 ந்யூரோ அனாடமி










படம் நன்றி விக்கிபீடியா.




மேலே இருக்கிற படம் காட்டுவது மூளையின் நெடுக்கு வெட்டுத்தோற்றம். இது மனுஷனோட மூளை. அதனால மஞ்சள் பகுதி அதிகமா இருக்கு. இந்த மஞ்சள் பகுதியை கார்டெக்ஸ் என்பாங்க.
சிவப்பா இருக்கிற பகுதியை கவனமா பாருங்க. இதுக்கு லிம்பிக் சிஸ்டம் ந்னு பெயர். இது நாம் இந்த பதிவுகளில பார்க்கிற சமாசாரங்களுக்கு ரொம்ப முக்கியம்.

பரிணாம வளர்ச்சில நீல பகுதியும் அதுக்கு கீழேயும் முதல்ல இருக்கிறதாகவும் பின்னே மனிதன் வரை உயரும்போது கடைசியில் மேலே இருக்கிற மாதிரியும் மூளை இருக்கிறதா சிம்பிளா வெச்சுக்கலாம். எலி மாதிரி சின்ன பாலூட்டிகளுக்கு மஞ்சள் பகுதில இருக்கிற மடிப்புகள் இராது. இந்த மஞ்சள் பகுதியை நியோ கார்டெக்ஸ் என்பாங்க. இதிலதான் நரம்பு செல்களும் அவற்றோட இணைப்புகம்பிகளும்இருக்கு. மடிப்புகள் இருக்கும்போது அதிக பரப்பு கிடைக்கிறதால அதிக செல்களும் அதனால அதிக மூளை செயல்பாடுகளும் மனுஷனுக்கு இருக்கு. சிம்பிள்தானே?

ஸ்பைனல் கார்ட் என்கிற தண்டு வடத்துலேந்துதான் உடம்பின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து உணர்ச்சி சிக்னல் எல்லாம் இந்த கார்டெக்ஸுக்கு வருது. கார்டெக்ஸூக்கு நேரடியாகவும் வரும். கீழே இருக்கிற ப்ரெய்ன் ஸ்டெம், தாலமஸ்  மாதிரி பகுதிகளுக்கு போயிட்டு அங்கிருந்தும் வரும்.

இந்த நியோ கார்டக்ஸ்ல திசுக்கள் எல்லாம் ஆறு அடுக்கா அரை மில்லி மீட்டர் விட்டம் இருக்கிற தூண் மாதிரி அமைஞ்சு இருக்கு. ஆழம் 2 மி.மி. தான்! இப்படி தூண் தூணா இருக்கிறதால ஆராய்ச்சி செஞ்சு இன்னின்ன இடம் இன்னின்ன செயல்களை செய்யுது அல்லது இன்னின்ன விஷயத்தை உள் வாங்குதுன்னு சொல்ல முடியுது. இந்த இடம் பார்வைக்கு (மூளையின் பின் பகுதி) இந்த இடம் கேட்கிறதுக்கு (காதுகள் பக்கம்) என்பது போல! தலைக்கு முன் பக்கம்  இருக்கிற மூளைதான் மனிதனுக்கு அதிகமா வளர்ந்து இருக்கு! இங்கேதான் மொழியை அறிகிற, உருவாக்குகிற இடங்கள் இருக்கு! இதுக்கு பக்கத்திலேயே கண்களுக்கு மேலே இருக்கிற இடங்கள்தான் சமூக செயல்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்கியமான இடங்கள். காதுகள் பக்கம் இருக்கிற மூளைதான் நினைவாற்றலுக்கு முக்கியம் அதுவேதான் முன்னே நடந்தவற்றை நினைவில் வைத்துக்கொண்டு இப்போதைய செயல்களை தகுந்தாற் போல மாற்றுகிறது. இப்படி ஆறு அடுக்கா அமைஞ்ச நியோ கார்டக்ஸ்தான் மனுஷனுக்கு 90% கார்டக்ஸ் என்கிற பெரு மூளை.

நம்ம சப்ஜக்டுக்கு முக்கியமானது லிம்பிக் சிஸ்டம். அது இந்த பெரு மூளைக்கு அடியில அமைஞ்சிருக்கு. இந்தியாவில இருக்கிற ஸ்டேட்ஸ் மாதிரி இது பலதாகவும் வெவ்வேறு இயல்புடனும் அமைஞ்சிருக்கு. இருந்தாலும் இதில நமக்கு இப்ப முக்கியமனது அமிக்டலா ஹிப்போகாம்பஸ் என்கிற ரெண்டு உருப்புகள். ஹிப்போகாம்பஸ் எப்போ எங்கே என்ன நடந்தது என்கிற ரீதியிலான நினைவுகளுக்கு முக்கியமானதா இருக்கு. இங்கே இருக்கிற நரம்பு செல்கள்தான் ஒரு விஷயத்தை கற்றூக்கொள்ளும்போது புதிய செயல்பாடு புதிய சர்க்யூட் என்று செயலாக இருக்கும்.

அமிக்டலா இன்னும் வித்தியாசமானது. நடக்கிற விஷயங்களை அடையாளம் காண்பதிலேயும் நினைவில வெச்சுக்கிறதிலேயும் இதுக்கு பங்கிருக்கு. ஹிப்போகாம்பஸ் மாதிரி நாள், இடம் ந்னு இல்லை. ஆனால் இது நடந்த நிகழ்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் முடிச்சு போட்டு வைச்சிருக்கு. ஒரு கடந்த கால நிகழ்வை நினைவுக்கு கொண்டு வர இது உதவறதோடு, இதுக்கான ஒரு குறியீட்டை உருவாக்கி அத்தோட எந்த உணர்ச்சி தொடர்பானது என்கிறதையும் நினைவுக்கு கொண்டு வரும்.

ஏனைய சிக்னலை எல்லாம் புறம்தள்ளி ஒரே விஷயத்தை கருத்தூன்றி கவனிக்கிறதும் (attention) இந்த உருப்பே. வருகிற சிக்னலை இன்னதுன்னு வகைப்படுத்தி அதுக்கு உரித்தான உணர்ச்சிகள் எழுவதிலும் ஹிப்போகாம்பஸ் உடன் இதுக்கு வேலையிருக்கு.
சமூக உறவுக்கும் இது முக்கியமானது. குறிப்பா ஒருவரை நம்பலாம் நம்பாதேன்னு எடை போடுவதில இது முக்கியம்

உணர்ச்சிகளோட தொடர்பு இருக்கறதால இதுவே நாம் சட்டுன்னு ஒரு விஷயத்துக்கு ரியாக்ட் செய்வதில முக்கியமா இருக்கு. ஒரு அச்சுறுத்தலுக்கு எதிர்வினைக்கு இது சாதகமா இருந்தாலும் பல சமயம் கோபம் பயம் ஆகியவற்றை தூண்டி பாதகமாகவும் இருக்கும்!
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! போதும், சப்ஜெக்டை புரிஞ்சுக்க  இவ்ளோ போதும்!

 

No comments: