Pages

Friday, May 30, 2014

உணர்வு சார் நுண்ணறிவு 5 - கோபம்




அனாடமி போரடிச்சு இருக்குமோன்னுஇருந்தாலும் இன்னும் ஒரு முக்கிய விஷயத்தை பாத்துட்டா அந்த சப்ஜெக்ட் நிஜமாவே முடிஞ்சுடும்.

அமிக்டலா உணர்ச்சிகளை தூண்டி விடுதுன்னு பார்த்தோம். இதை கண்ட்ரோல் செய்யறது நியோகார்டக்ஸ். இதுக்கு கொஞ்சம் நேரம் எடுத்தாலும் இதுவே எதிர்வினையை தீர்மானிக்கும். தாலமஸ்லேந்து நரம்புகளோட சிக்னல் கொஞ்சமேதான் அமிக்டலாவுக்கு போகும். பெரும்பாலும் அவை நியோகார்டக்ஸுக்கே போகும். நியோகார்டக்ஸ் அதை ஆராய்ஞ்சு முடிவு எடுக்கும். அது மேலும் சில எண்ணங்களை கிளரியும் விடலாம். இதனால ஒரு சோகமான விஷயம் முதலில உணரப்பட்டு பின்னே அது கோபத்தையும் தூண்டலாம்.
இந்த இடது பக்க நெற்றிப்பகுதிக்கு பின்னே இருக்கிற மூளையின் பகுதி (left pre frontal cortex) தான் இந்த உணர்ச்சிகளுக்கு ஆஃப் ஸ்விட்ச்! இதே மாதிரி வலது பக்கம் இருக்கிற மூளையின் பகுதிதான் பயம், தாக்குதல் போன்ற எதிர்மறை உணர்வுகளுக்கு இருப்பிடம். இதை இடது பக்கம் செக் செய்து உணர்ச்சிகளை கண்ட்ரோல்ல வைக்குது! அதே சமயம் அடங்குடா ந்னு லிம்பிக் சிஸ்டத்துக்கு சிக்னல் அனுப்புது. இந்த நியோகார்டக்ஸ் - லிம்பிக் சிஸ்டம் பாலன்ஸ்தான் நம்மோட உணர்ச்சிகளை தீர்மானிக்குது! அதாவது நம் மனச்சலனங்களை தீர்மானிக்குது (இங்கே வலது இடதுன்னு சொன்னது எல்லாம் வலது கைப்பழக்கம் உள்ளவங்களுக்கு. இடது கை பழக்கமா இருந்தா நேர் எதிர்.)

வேலை செய்வதுக்கான நினைவகம் இந்த ப்ரீ ப்ராண்டல் கார்டக்ஸ்தான். அதனாலத்தான் சில கடுமையான பலமான உணர்ச்சிகள் நம்மை ஒரு வேலையும் செய்ய விடாம பாதிக்குது. ச்சே! நேரா யோசிக்கக்கூட முடியலைப்பா ந்னு சொல்கிறோம்

யார் வேணுமானாலும் கோபப்படலாம். அது சுலபம். ஆனால் சரியான நபர்கிட்ட சரியான அளவுக்கு சரியான நேரத்தில சரியான வழியில கோபப்படுவது…. அது சுலபமில்லை.” – இப்படி சொன்னவர் அரிஸ்டாடில்.

நாட்டில கோபப்படாதவங்களே இருக்க மாட்டாங்க. காமத்துக்கு அடுத்ததா உலகெங்கும் பரவி இருக்கிறது கோபம்தான். கோபம் ஒத்தரை தன் நிலையை இழக்கசெய்யுது. மத்தவரோட சரியான உறவு வைத்துக்கொள்ள தடையா இருக்கு. கோபத்தால தன் வேலையை தொலைக்கிறவர்கள் பலர். தனக்கு உதவி செய்கிறவர்களை தொலைக்கிறவர்கள் சிலர். தன் காதலை தொலைக்கிறவர்கள் சிலர். . நிறைய பேருக்கு இது தனக்கு ஒரு பிரச்சினையா இருக்கிறது தெரியும். இருந்தாலும் அதை பத்தி ஒண்ணும் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறாங்க

ஆனால் சிலர் இருக்காங்க. ஏம்பா கோபப்பட்டே ந்னு கேட்டாநானா? கோபமா? கோபப்படவேயில்லையே!” என்பார்கள்! மத்தவங்களை கேட்டாஅவனா? சரியான சிடு மூஞ்சி. அவன்கிட்டே ஒரு சம்பந்தமும் வெச்சுக்கக்கூடாதுந்னு சொல்லுவாங்க. ஆனா அந்த நபருக்கோ அது பத்தி ஒண்ணுமே தெரியாது! தனக்கு ஏன் நண்பர்களே இல்லைன்னு அவரு குழம்பிகிட்டு இருப்பாரு!

கோபம்ன்னு இல்லை. எல்லா உணர்ச்சிகளும் இப்படித்தான். காமமும் கோபமும் மிக ஆற்றல் வாய்ந்த கட்டுப்படுத்த வேண்டிய உணர்ச்சிகளாக இருக்கிறதால இதை உதாரணத்துக்குச்சொன்னேன்!

விதி விலக்கா சில விஷயங்கள் தவிர உணர்ச்சி வசப்பட்டு செய்கிற எந்த செயலும் சரியான விளைவைத் தராது!


No comments: