Pages

Monday, May 19, 2014

உணர்வு சார் நுண்ணறிவு 3 - கொஞ்சமே கொஞ்சம் சரித்திரம்!




வெய்ன் பெய்ன், கீத் பீஸ்லி,பெடோக், ல்யூனர், ஸ்டான்லி க்ரீன்ஸ்பான் ந்னு பலரும் {Wayne Payne (1985)  Keith Beasley (1987)  Beldoch (1964) Leuner (1966) Stanley Greenspan (1989)} இதை பத்தி பேசியிருந்தாலும், 1990 இல் யேல் பல்கலை கழகத்தை சேர்ந்த பீட்டர் ஸலோவே  ஜான் மேயர் ன்னு ரெண்டு பேர் எமோஷனல் இண்டெலிஜன்ஸ் பற்றிய முதல் அறிவியல் ஆவணத்தை வெளியிட்டாங்க. அப்ப அவங்களுக்கே இதை யார் புரிஞ்சுக்கப்போறாங்க ந்னு தோணித்தாம். இப்ப அது நல்லா வளர்ந்துவிட்டது. பல நிறுவனங்களும் அதுக்கு தேவையான பணியாளர்களை நியமிக்கும் போது இதற்கான சோதனைகளை செய்ய ஆரம்பிச்சு இருக்காங்க. இவங்களோட கருதுகோளை எபிலிட்டி மாடல் என்கிறாங்க.

இதன் படி நான்கு ஆற்றல் அல்லது திறமை. தன்னுள்ளேயும் வெளியேவும் உணர்வுகளை கண்டு பிடித்து வகைப்படுத்துவது. இது மிகவும் முக்கியம். இது இல்லாமல் அடுத்த படிகள் இல்லை. இரண்டாவது இதை கட்டுப்படுத்தி,  பயன்படுத்தி யோசித்தல், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போல சிலவற்றுக்கு பயன்படுத்துவது. தன் மனநிலைக்கு (mood) தக்கபடி இருக்கிற வேலையை அமைத்துக்கொள்வது. மூன்றாவதா உணச்சிகளை புரிந்து கொண்டு அவற்றில் இருக்கிற நுட்பமான வேறுபாடுகளை புரிந்து செயல்படுவது. கடைசியாக தன் /மற்றவர் உணர்வுகளை மேலாளுவது.

கோன்ஸ்டாடின்னு ஒத்தர் இன்னொரு வகையா இதை வெளிப்படுத்தினார். இது ட்ரெய்ட் மாடல். இவர் உணர்ச்சி பூர்வமாக தன்னால என்ன செய்ய முடியும்ன்னு ஒத்தர் நம்புவதுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

1995 இல் கோல்மேன் என்கிறவர் பிரபலமான புத்தகம் ஒண்ணை இது பத்தி எழுதி வெளியிட்டார். [Emotional Intelligence - Why it can matter more than IQ] இவர் முன்னே சொன்ன ரெண்டுத்தையும் கலந்து முன் வைச்சார். மிக்ஸ்ட் மாடல்.

இவர் சொல்வது: 1, தன்னை அறிதல். தன்னோட உணர்வுகள், பலம், பலகீனம், உந்துதல், மதிப்புகள், இலக்குகள் இவற்றையும் இவற்றை பயன்படுத்தினால் மற்றவர் மீது அவற்றின் தாக்கத்தையும் சரியாக அறிந்திருத்தல்.
2. சுய கட்டுப்பாடு. தடையாக இருக்கிற உணர்வுகளை அடக்கியோ அல்லது திசை திருப்பியோ மேலாளுதல். மாறுகின்ற சூழல்களுக்கு தக்கபடி தன்னி மாற்றிக்கொள்ளுதல்.
3. உறவுகளை நாம் விரும்புகிற திசையில் நகர்த்துதல்.
4. எம்பதி என்கிற புரிந்துணர்வு.
5. தன்முனைப்பாற்றல்.
ரொம்ப ட்ரையா இருக்கில்லே! கண்டுக்காதீங்க. வருகிற பதிவுகளில எளிமையா பார்த்துக்கொண்டு போகலாம். இப்போதைக்கு பட்டியல் போடணுமேன்னு எழுதினேன்!

இதை எல்லாம் போட்டு குழப்பிக்காம சில விஷயங்களை பார்த்துக்கொண்டு போகலாம்.
இதற்கான சில சோதனைகளும் உருவாக்கப்பட்டு இருக்கு. MSCEIT ன்னு ஒண்ணு. Goleman model க்கு  Emotional Competency Inventory (ECI),  Emotional and Social Competency Inventory (ESCI) The Emotional Intelligence Appraisal, ந்னு ரெண்டு. இதுக்குள்ள எல்லாம் நாம் போகப்போகிறதில்லை. (அப்பாடா!)

வளர்ந்துகிட்டு இருக்கிற இந்த சப்ஜெக்ட்ல மாற்றுக்கருத்துகளுக்கும் விவாதங்களுக்கும் குறைச்சலில்லை. இதெல்லாம் ஒரு அறிவுன்னே ஒப்புக்கொள்ளாதவங்களும் இருக்காங்க! இருந்தாலும் நாம் முடிஞ்ச வரை கொஞ்சம் இதை பத்தி உள்வாங்கிக்கொண்டு நம் உள்நாட்டு பாரம்பரிய அறிவியலுடன் சேர்ந்து போகிறதா என்று பார்க்கலாம்

மேற்கொண்டு இதை புரிஞ்சுகொள்ள ந்யூரோ அனாடமி பார்க்கணும்என்ன! வேணாமா? கொஞ்சம்? கொஞ்சமே கொஞ்சம்? ரைட் முடிஞ்ச வரை எளிமையாவே வெச்சுக்கொள்ளலாம். ஒரே ஒரு பதிவு!


No comments: