நிகழ்வினைப் பற்றி யிறப்பெதிர்வு நிற்ப
நிகழ்கா லவையுமே நிகழ்வே – நிகழ்வொன்றே
யின்றுண்மை தேரா திறப்பெதிர்வு தேரவுன
லொன்றின்றி யெண்ண வுனல்.
நிகழ்வினை பற்றிஇறப்பு எதிர்வு நிற்ப
நிகழ்கால் அவையுமே நிகழ்வே – நிகழ்வுஒன்றே
இன்று உண்மைதேராது இறப்புஎதிர்வு தேரஉனல்
ஒன்றுஇன்றி எண்ண உனல்.
நிகழ்காலம் என்று ஒன்று இருப்பதாலேயே இறந்த காலம் எதிர்காலம் என நினைப்புத் தோன்றுகின்றன. எதிர்காலம் என்னும் அந்த காலத்துக்கு சென்றுவிட்டால் இன்றைய நிகழ்கால பொருட்கள் இறந்த கால பொருட்களாகி விடுகின்றன. இன்றைய எதிர்கால பொருட்கள் நிகழ்கால பொருட்களாகி விடுகின்றன. அதாவது எக்காலத்திலும் ஐம்புலன்களால் மனதறியும் பொருட்களே தோன்றுகின்றன. ஆகவே இப்போதே உள்ளதின் உண்மையை விசாரித்து அறியாது இறந்த கால விஷயங்களையும் எதிர்கால விஷயங்களையும் நினைப்பதில் பொருளில்லை. இது எதைப்போல இருக்கிறதென்றால்...
எப்போதும் ஒன்று மட்டுமே உள்ளது. அந்த ஒன்று இன்னொரு ஒன்றைப்பற்றிக்கொண்டு இரண்டு ஆகிறது. அது இன்னொரு ஒன்றைப்பற்றிக்கொண்டு மூன்று ஆகிறது. ஆக இலக்கம் என்னவாக இருந்தாலும் அதன் அடிப்படை ஒன்றுகளாலேயே ஆனது. இந்த ஒன்றை விட்டுவிட்டு மற்ற இலக்கங்களால் எண்ணுவதைப்போலவே; எந்த காலமானாலும் அந்தந்த காலத்தில் மனது ஐம்புலன்களால் காண்பதே தோன்ற அதன் உண்மை விசாரிக்காமல் இறந்த / எதிர்காலங்கள் குறித்து நினைப்பது உள்ளது.
भूतं भविष्यच्च भवत्स्वकाले तद्वर्तमानस्य विहाय तत्त्वम् ।
हास्या न किं स्याद्गतभाविचर्चा विनैकसङ्ख्यां गणनेव लोके ॥ १७ ॥
பூ⁴தம்ʼ ப⁴விஷ்யச்ச ப⁴வத்ஸ்வகாலே தத்³வர்தமானஸ்ய விஹாய தத்த்வம் |
ஹாஸ்யா ந கிம்ʼ ஸ்யாத்³க³தபா⁴விசர்சா வினைகஸங்க்²யாம்ʼ க³ணனேவ லோகே || 17 ||
No comments:
Post a Comment