விதிமதிமுல விவேக
மிலார்க்கே
விதிமதி வெல்லும் விவாதம்
– விதிமதிகட்
கோர் முதலாந் தன்னை
யுணர்ந்தா ரவைதணந்தார்
சார்வரோ பின்னுமவை சாற்று.
விதி மதிமுல விவேகம்
இலார்க்கே
விதிமதி வெல்லும் விவாதம்
– விதிமதிகட்கு
ஓர் முதலாம் தன்னை
உணர்ந்தார் அவை தணந்தார்
சார்வரோ பின்னும் அவை
சாற்று.
விதி என்பது ஈசனின் நியதி. மதி
என்பது ஜீவனின் இயல்பு. சிலர் விதியை மாற்ற இயலாது என்பர். சிலர்
விதியை மதியால் வெல்லலாம் என்பர். இந்த விவாதம் யாருக்கு இருக்கும்? இந்த
விதிக்கும் மதிக்கும் மூலமாக ஒரு வஸ்து உள்ளது என உணராதவர்களுக்கு மட்டுமே
இருக்கும். அந்த வஸ்துவை உணர்ந்தவதர்கள் விதி மதிகளை ஒழித்தாவராவர். பின்
அவற்றை அவர்கள் நினைப்பார்களா என்ன சொல்வாய்.
विधेः
प्रयत्नस्य च कोऽपि वाद- स्तयोर्द्वयोर्मूलमजानतां
स्यात् ।
विधेः
प्रयत्नस्य च मूलवस्तु सञ्जानतां नैव विधिर्न यत्नः ॥ २१ ॥
விதே⁴: ப்ரயத்னஸ்ய ச கோ(அ)பி வாத³- ஸ்தயோர்த்³வயோர்மூலமஜானதாம்ʼ ஸ்யாத் |
விதே⁴: ப்ரயத்னஸ்ய ச மூலவஸ்து ஸஞ்ஜானதாம்ʼ நைவ விதி⁴ர்ன யத்ன: || 21 ||
No comments:
Post a Comment